தென்கொரியா சியோலை தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் முக்கிய கட்டுமான நிறுவனம் `Booyoung’. இங்கு பணிபுரியும் ஊழியர்கள் ஒரு குழந்தை பெற்றுக்கொண்டால் 62 லட்ச ரூபாய் வழங்கப்படும் என நிறுவனம் அறிவித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
தென்கொரியாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க இந்தப் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. நிறுவனத்தில் பணிபுரியும் ஆண், பெண் என இருவரும் இதில் பயனடையலாம். அதன்படி ஒரு குழந்தைக்கு 62,26,106 ரூபாய் (75,000 அமெரிக்க டாலர்கள்) வழங்கப்படுகிறது.
2021-ல் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 70 குழந்தைகளைப் பெற்ற ஊழியர்களுக்கு மொத்தம் 5.25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 43,58,27,437 ரூபாய்) வழங்குவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.