Last Updated:
தனது மனைவி பிரசவத்திற்காக சொந்த ஊர் வந்த ராணுவ வீரர் குழந்தை பிறப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு இறந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தனது குழந்தை பிறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரருக்கு, ஸ்ட்ரெச்சரில் அவரது மனைவி அஞ்சலி செலுத்தியது அனைவரையும் கண்கலங்க செய்தது.
மகாராஷ்டிரா மாநிலம் சதாராவைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரமோத் ஜாதவ், தனது மனைவியின் பிரசவ காலத்திற்காக விடுப்பு எடுத்து வந்துள்ளார்.
பிரசவத்திற்காக அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பைக்கில் சென்ற ராணுவ வீரர் பிரமோத் ஜாதவ், விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அடுத்த ஒரு மணி நேரத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
மறைந்த பிரமோத்தின் உடலுக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் இருந்து ஸ்ட்ரெச்சரில் அழைத்து வரப்பட்ட அவரது மனைவி, தனது கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார்.
பிறந்து 8 மணி நேரமான பச்சிளங் குழந்தையும், தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கொண்டு வரப்பட்டு பிரியாவிடை கொடுத்தது அங்கிருந்தவர்களை கலங்க வைத்தது.
Jan 12, 2026 10:16 PM IST


