Last Updated:
உங்களுடைய குழந்தைக்கு 21 வயது வரும்போது அதில் 17 லட்சம் ரூபாயை உங்களால் வித்ட்ரா செய்ய முடியும் மற்றும் 26 வயதில் மீதம் இருக்கும் 34 லட்ச ரூபாயை வித்ட்ரா செய்யலாம்.
பெரும்பாலான நபர்கள் செல்வமகள் சேமிப்புத் திட்டம் அல்லது NPS வத்சால்யா போன்ற சேமிப்புத் திட்டங்கள் 69 லட்ச ரூபாய் அல்லது 1.4 கோடி ரூபாய் என்ற பெரிய தொகை மூலமாக தங்களுடைய குழந்தையின் எதிர்காலத்தை பொருளாதார ரீதியாக பாதுகாப்பாக வைக்கும் என்று நம்புகின்றனர். ஆனால் நீங்கள் எதிர்பார்க்கும் தொகை இதன் மூலமாக உண்மையில் உங்களுக்கு கிடைக்குமா? பணவீக்கத்தை கருத்தில் கொள்ளாமல் பெரிய அளவிலான எண்களுக்கு பல முதலீட்டாளர்கள் பலியாகி விடுகின்றனர்.
சுகன்யா சம்ரிதி திட்டம் 69 லட்சம் ரூபாயை தருவதாக கூறினாலும் அடுத்த 21 வருடங்களுக்கு ஏற்படக்கூடிய பணவீக்கத்தோடு சரிசெய்த பிறகு அது உண்மையில் 17 லட்சம் ரூபாயை மட்டுமே உங்களுக்கு கொடுக்கும். அதே போல NPS வத்சால்யா திட்டமானது மெச்சூரிட்டியின் போது 1.4 கோடி ரூபாயை கொடுப்பதாக காட்டினாலும் அதற்கான பே-அவுட் என்பது வெறும் 35 லட்சம் ரூபாயாகும், அதாவது இன்றைய பணத்திற்கு அது 8.4 லட்சம் ரூபாய் மட்டுமே. எனவே இப்போது இந்த கேள்வியை உங்களிடம் நீங்கள் கேட்டுக் கொள்ள வேண்டும்:- இப்போது இருந்து அடுத்த 20 வருடங்களுக்கு 8 லட்சம் ரூபாய் அல்லது 17 லட்சம் ரூபாய் உங்களுடைய குழந்தையின் கல்வி அல்லது திருமணத்திற்கு போதுமானதாக இருக்குமா?
மாறாக, குழந்தைகளுக்கான மியூச்சுவல் ஃபண்டுகளில் ஒருவர் கவனம் செலுத்தலாம். ஆண்டுக்கு 12 சதவீத ரிட்டர்ன் என்று வரும்போது இது மாதிரியான நிதிகள் 1.4 கோடி ரூபாய்க்கு வளர்ந்து, வரி பிடித்தங்களுக்கு பிறகு அது 1.2 கோடி ரூபாயாக மாறுகிறது. அதாவது இன்றைய பணத்தில் அது கிட்டத்தட்ட 34 லட்ச ரூபாய்க்கு சமம். அது மட்டுமல்லாமல், உங்களுடைய குழந்தைக்கு 21 வயது வரும்போது அதில் 17 லட்சம் ரூபாயை உங்களால் வித்ட்ரா செய்ய முடியும் மற்றும் 26 வயதில் மீதம் இருக்கும் 34 லட்ச ரூபாயை வித்ட்ரா செய்யலாம்.
எனவே, பொருளாதார திட்டங்களை அமைக்கும் போது உண்மையான மதிப்புகளை எப்போதும் பயன்படுத்துங்கள். பணவீக்கம் என்பது இப்போது உங்களுடைய கையில் இருக்கும் பணத்தின் மதிப்பை குறைக்க கூடியது. உதாரணமாக இன்று 500 ரூபாய்க்கு உங்களால் வாங்கக்கூடிய பொருட்களின் எண்ணிக்கை என்பது அடுத்த 2 முதல் 3 வருடங்களுக்கு அதே 500 ரூபாயை கொண்டு வாங்கும் பொருட்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும்.
நாளடைவில் பொருட்களின் விலையானது அதிகரிக்கும். இதனால் அதே 500 ரூபாய்க்கு உங்களால் குறைந்த எண்ணிக்கை பொருட்களையே வாங்க முடியும். பொருட்களின் விலை ஏற்றம் என்பது பணவீக்கம் என்று அழைக்கப்படுகிறது. பணவீக்கம் மிதமானதாக இருக்கும் போது, அது பொருளாதாரத்திற்கு நல்லதாக கருதப்படுகிறது. ஆனால் அது அதிக அளவில் இருக்கும் பட்சத்தில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயமாக மாறுகிறது. இதனால் பொருட்களின் விலை அதிகரித்து, சாமானிய மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.
July 27, 2025 2:37 PM IST