Last Updated:
உங்களுடைய பிள்ளை கல்லூரி சேர்வதற்கான வயது வரும்போது சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான்ஸ் (STPs) என்ற ஆப்ஷன் பயன்படுத்தி ஈக்விட்டி திட்டங்களில் இருந்து டெப்ட் திட்டங்களுக்கு SIP-களை மாற்றிக் கொள்ளலாம்.
இன்றைய சூழ்நிலையில் கல்விச் செலவுகளைச் சமாளிப்பதற்கு நாம் சற்று முன்கூட்டியே திட்டமிட வேண்டி உள்ளது. கல்வித்துறையைப் பொறுத்த அளவு பணவீக்கம் என்பது வேகமாக அதிகரித்து வருகிறது. நல்ல டாப் ரேட்டிங் கொண்ட ஒரு கல்லூரியில் இன்ஜினியரிங் படிப்பதற்கு 4 ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட 25 லட்சம் ரூபாய் வரை ஆகிறது. இதுவே வெளிநாடுகளில் MBA படிப்பதற்கு 60 லட்சம் ரூபாய்க்கு மேல் தேவைப்படுகிறது.
எனவே உங்களுடைய குழந்தையின் கல்வியைக் கருத்தில் கொண்டு ஆரம்பத்திலேயே SIP-ல் முதலீடு செய்வது புத்திசாலித்தனமான யோசனையாக இருக்கும். உதாரணமாக, 15 வருடங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாயை SIP-ல் முதலீடு செய்து, ஒரு ஆண்டுக்கு 10 முதல் 12 சதவீத ரிட்டர்ன் என்ற அடிப்படையில், இறுதியாக 30 முதல் 35 லட்சம் ரூபாய் வரை உங்களால் பெற முடியும். எவ்வளவு விரைவாக ஆரம்பித்து எவ்வளவு காலத்திற்கு நீங்கள் முதலீடு செய்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்களுடைய பணம் வளரும்.
8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதைக் கருத்தில் கொள்ளலாம். 5 முதல் 10 வருடங்கள் என்ற நீண்ட கால காரணங்களுக்காக முதலீடு செய்பவர்களுக்கு ஹைப்ரிட் ஃபண்டுகள் சிறந்ததாக இருக்கும். உங்களுடைய இலக்கை நெருங்கும் போது டெப்ட் ஃபண்டுகளுக்கு மாற்றுவது உங்களுடைய முதலீட்டுப் பணத்தைப் பாதுகாப்பதற்கு உதவும். குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள SIP திட்டங்களில் பூட்டுக் காலங்களும் உள்ளது.
SIP-களை நீங்கள் மிக எளிதாக Zerodha, Groww போன்ற வெப்சைட்டுகள் மூலமாகவோ அல்லது நேரடியாக மியூச்சுவல் ஃபண்ட் வெப்சைட்டுகளில் ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு மாதமும் நீங்கள் எவ்வளவு பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு ஒரு SIP கால்குலேட்டரைப் பயன்படுத்தவும். வரிப் பலன்களைப் பெறுவதற்கு SIP முதலீட்டைப் பெற்றோரின் பெயரில் வைப்பது நல்லது. இந்த முதலீட்டை நீங்கள் குழந்தையின் கல்வி என்ற காரணத்தின் கீழ் காட்டலாம்.
ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் கீழ் வரும் SIP-களுக்கு வருமான வரிச் சட்டத்தில் உள்ள 80C-ன் கீழ் வரிப் பலன்கள் உண்டு. நீண்ட கால முதலீடு மூலமாக உங்களுக்குக் கிடைத்த லாபம் ஒரு லட்சம் ரூபாயை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதற்கு 10 சதவீத வரி செலுத்த வேண்டும். உங்களுடைய குழந்தை இந்த பணத்தை 18 வயது அல்லது அதன் பிறகு வித்டிரா செய்யும் போது அவர்களுடைய வருமானத்தின் அடிப்படையில் இதை விட குறைவான வரி செலுத்தினால் போதுமானது. அதே நேரத்தில், மைனர் பெயரில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்.
உங்களுடைய பிள்ளை கல்லூரி சேர்வதற்கான வயது வரும்போது சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான்ஸ் (STPs) என்ற ஆப்ஷன் பயன்படுத்தி ஈக்விட்டி திட்டங்களில் இருந்து டெப்ட் திட்டங்களுக்கு SIP-களை மாற்றிக் கொள்ளலாம். இப்படி செய்யும்போது வித்டிரா செய்யும் சமயத்தில் சந்தை தொடர்பான அபாயம் குறைவாக இருக்கும். ஒருவேளை வெளிநாடுகளில் கல்வி பயில்வதற்கு சேமிக்கிறீர்கள் என்றால் பார்ஷியல் SIP எக்ஸ்போஷரை குளோபல் ஈக்விட்டி திட்டங்களுக்கு மாற்றுவதன் மூலமாக பணப்பரிமாற்ற செலவுகள் மற்றும் வெளிநாட்டுக் கட்டணப் பணவீக்கத்தைத் தவிர்க்கலாம்.
சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டதாக இருந்தாலும் SIP என்பது இந்தியாவில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் ஒரு முதலீட்டுத் திட்டமாக இருப்பதால், இது முதலீட்டாளரின் நம்பிக்கையைக் காட்டுகிறது. சரியான ஃபண்டில் முதலீடு செய்வதன் மூலமாக உங்களுடைய பணத்தை நீங்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். ஒரு மாதத்திற்கு 1000 ரூபாய் என்ற குறைந்தபட்ச தொகையை நீங்கள் முதலீடு செய்தால் கூட, நாளடைவில் இது செல்வத்தைச் சேமிப்பதற்கு ஒரு சிறந்த ஆப்ஷனாக இருக்கும். உங்களுடைய வருமானம் வளர்ச்சி அடையும் போது ஒவ்வொரு ஆண்டும் உங்களுடைய SIP முதலீட்டையும் 10 சதவீதம் அதிகரிக்கவும்.
August 15, 2025 2:12 PM IST


