Last Updated:
அரசு மருத்துவமனை ICU–ல் இரு பச்சிளம் குழந்தைகளை எலி கடித்த அதிர்ச்சி சம்பவம் மத்தியப் பிரதேசம் இந்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மருத்துவமனையின் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பச்சிளம் குழந்தைகளின் கை விரல், தலை, தோள்பட்டை ஆகிய இடங்களில் எலி கடித்து காயம் ஏற்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலம், இந்தூரில் அந்த மாநிலத்தின் மிகப் பெரிய அரசு மருத்துவமனையான மஹாராஜா யஷ்வந்த்ராவ் சிக்கித்சாலயா மருத்துவமனை அமைந்துள்ளது.
இந்த மருத்துவமனையின் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள, பிறந்த பச்சிளம் குழந்தைகள் இருவரின் கை விரல், தலை, தோள்பட்டை ஆகிய இடங்களில் எலி கடித்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தூரில் உள்ள மஹாராஜா யஷ்வந்த்ராவ் சிக்கித்சாலயா அரசு மருத்துவமனையில், குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் செவிலியர் ஒருவர், இரு குழந்தைகளுக்கு கைவிரல், தலை மற்றும் தோள்பட்டையில் ஏதோ கடித்தது போன்ற காயங்கள் இருந்ததைக் கண்டார்.
இதனையடுத்து உடனடியாக அந்தச் செவிலியர் மருத்துவமனை நிர்வாகத்திற்கு இது குறித்து தகவல் கொடுத்துள்ளார். அந்தத் தகவலை அடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளை மருத்துவமனை நிர்வாகம் ஆராய்ந்துள்ளது.
அதில் இரு குழந்தைகள் படுக்கவைக்கப்பட்டிருக்கும் தொட்டில்களுக்கு அருகிலேயே, மருத்துவ உபகரணங்கள் மீது எலிகள் ஓடுவது பதிவாகியிருக்கிறது.
இதில் ஒரு குழந்தைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை எலி கடித்ததும், அதனால், அந்தக் குழந்தையின் கை விரலில் காயம் ஏற்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், மற்றொரு குழந்தையை திங்கள் அன்று எலி கடித்துள்ளது. இதில் அந்தக் குழந்தைக்கு தலை மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. தற்போது இந்த காணொளிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
September 02, 2025 5:25 PM IST


