யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் மூத்த விநாயகர் கோவில் பகுதியில் உள்ள வீடொன்றின் முன்பாக சுமார் 10 அடி நீளமான முதலையொன்று இன்று (23) உயிருடன் பிடிபட்டது.
வீதியோரமாக உயிருடன் முதலை இருப்பதாக பொதுமக்கள் தகவலளித்த நிலையில் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களால் முதலை பிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.
யாழ். மாவட்டத்தில் நிலவிவரும் மழையுடனான வெள்ளப்பெருக்கு காரணமாக அருகில் உள்ள குளத்தில் இருந்த முதலை வீதிக்கு வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
யாழ். விசேட நிருபர்
The post குளத்தில் இருந்து வீதிக்கு வந்த சுமார் 10 அடி நீளமான முதலை appeared first on Thinakaran.


