• Login
Thursday, May 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

“குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் வழங்கும் ஒரே நாடு இந்தியா” – மக்களவையில் மத்திய அமைச்சர் தகவல் | India only country where price of petrol, diesel came down: Hardeep Puri in Lok Sabha

GenevaTimes by GenevaTimes
March 12, 2025
in வணிகம்
Reading Time: 7 mins read
0
“குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் வழங்கும் ஒரே நாடு இந்தியா” – மக்களவையில் மத்திய அமைச்சர் தகவல் | India only country where price of petrol, diesel came down: Hardeep Puri in Lok Sabha
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

புதுடெல்லி: கடந்த 3 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலையை குறைந்த விலைக்கு வழங்கும் ஒரே நாடு இந்தியாதான் என்று பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

எண்ணெய் வயல்கள் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) திருத்த மசோதா, 2024 மீதான விவாதம் மக்களவையில் இன்று (மார்ச் 12) நடைபெற்றது. உறுப்பினர்கள் முன்வைத்த வாதங்களுக்கு அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பதிலளித்தார். அப்போது அவர், “இந்தியா தற்போது 39 நாடுகளிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்கிறது. விநியோகத்தைப் பொறுத்தவரை, கயானா, சுரினாம் மற்றும் பிரேசிலில் இருந்து விநியோகம் அதிகரித்துள்ளது. விநியோகத்தில் பற்றாக்குறை இல்லை. மலிவான மூலங்களிலிருந்து எரிபொருட்களை நாங்கள் தொடர்ந்து வாங்கி வருகிறோம். இவ்வாறே தொடர்ந்து வாங்குவோம்.

கடந்த மூன்று ஆண்டுளைப் பொறுத்தவரை, குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் வழங்கும் ஒரே நாடு இந்தியாதான். மத்திய கலால் வரியை பிரதமர் மோடி இரண்டு முறை குறைத்தார். அதேநேரத்தில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் எரிபொருள் மீதான வாட் வரியை அதிகரித்துவிட்டன.

நிலையான எரிசக்தியை உறுதி செய்யும் நோக்குடன் இந்தியா செயல்பட்டு வருகிறது. இது உயிரி எரிபொருட்களுக்கு மட்டும் என்றில்லாமல், உயிரி எரிவாயு மற்றும் பசுமை ஹைட்ரஜனுக்கும் நீட்டிக்கப்படும். இத்துறையில், புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவது, புதிய ஸ்டார்ட்அப்களை ஊக்குவிப்பது உட்பட அனைத்திலும் நாம் மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளோம். இவ்விஷயத்தில் இந்தியாவின் அணுகுமுறை, ஒரு முழுமையான அணுகுமுறையாக இருக்கிறது” என தெரிவித்தார்.

Read More

Previous Post

‘மீண்டும் அது நடந்தால் பும்ராவால் கிரிக்கெட் விளையாடவே முடியாது’

Next Post

பாக். ரயில் கடத்தல்: இதுவரை 150 பிணைக் கைதிகள் மீட்பு; படையினரால் 27 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை | Jaffar Express hijacking: Over 150 rescued, 27 terrorists killed as rescue operation continues in Balochistan

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In