அந்த வகையில் இந்தியன் வங்கி, ஐடிபிஐ வங்கி மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) ஆகியவை தற்போது இதுபோன்ற வரையறுக்கப்பட்ட காலத்திற்கு கிடைக்கும் திட்டங்களை வழங்குகின்றன, இவற்றின் காலக்கெடு செப்டம்பர் 2025 ஆகும். அதாவது செப்டம்பர் இறுதி வரை மட்டுமே இந்த ஸ்பெஷல் FD திட்டங்கள் முதலீடு செய்ய கிடைக்கும்.
இந்த FD திட்டங்களின் சிறப்பு என்ன.?
வழக்கமான FD திட்டங்களைப் போலன்றி, ஸ்பெஷல் FD திட்டங்கள் 444, 555 மற்றும் 700 நாட்கள் போன்ற தனித்துவமான மெச்சூரிட்டி பீரியட்டுடன் வருகின்றன. இவை வழக்கமான திட்டங்களை விட சற்று அதிக வட்டி விகிதங்களையும் முதலீடு செய்பவர்களுக்கு வழங்குகின்றன, மேலும் இவை சீனியர் சிட்டிசன்கள் மற்றும் சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதல் சலுகைகளையும் வழங்குகின்றன. மேலும் இந்த சிறப்பு திட்டங்கள் காலக்கெடுவிற்கு உட்பட்டவை, அதாவது காலக்கெடு முடிந்ததும் வங்கிகள் அவற்றை க்ளோஸ் செய்து விடலாம் அல்லது இவற்றின் விகிதங்களை மாற்றியமைக்கலாம். இந்த சிறப்பு FD-களில் சிலவற்றைப் பார்ப்போம்.
இந்தியன் வங்கியின் IND SECURE மற்றும் IND GREEN:
இந்தியன் வங்கி 2 சிறப்பு FD திட்டங்களை வழங்குகிறது. இன்ட் செக்யூர் எனப்படும் 444 நாள் திட்டத்தில், 60 வயதிற்குட்பட்ட பொதுமக்களுக்கு 6.70% வட்டி வழங்கப்படுகிறது, 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு 7.20% மற்றும் 80 வயதிற்கு மேற்பட்ட சூப்பர் சீனியர் குடிமக்களுக்கு 7.45% வட்டி வழங்கப்படுகிறது.
அதே நேரம் இன்ட் கிரீன் திட்டமானது 555 நாட்கள் மெச்சூரிட்டி பீரியட் கொண்டது. இந்த திட்டத்தில் பொதுமக்களுக்கு 6.60%, சீனியர் சிட்டிசன்களுக்கு 7.10% மற்றும் சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 7.35% வட்டியை வங்கி வழங்குகிறது. இரண்டு திட்டங்களும் வரும் செப்டம்பர் 30, 2025 வரை முதலீட்டிற்காக அமலில் இருக்கும்.
ஐடிபிஐ வங்கியின் UTSAV CALLABLE திட்டம்:
ஐடிபிஐ வங்கியானது அதன் Utsav Callable FD-யை 444, 555 மற்றும் 700 நாட்கள் ஆகிய மூன்று சிறப்பு கால அவகாசங்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் திட்டத்தின் காலத்தைப் பொறுத்து, பொதுமக்களுக்கான வட்டி விகிதங்கள் 6.60% முதல் 6.75% வரை இருக்கும், அதே நேரத்தில் மூத்த குடிமக்களுக்கு 7.10% முதல் 7.25% வரை வட்டி விகிதம் இருக்கும். சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு சிரஞ்சீவி எஃப்.டி.யின் கீழ் விகிதங்கள் 7.40% வரை வழங்கப்படுகின்றன. இந்த FD-க்களுக்குமான காலக்கெடு செப்டம்பர் 30, 2025 ஆகும்.
எஸ்பிஐ-யின் AMRIT VRISHT திட்டம்:
எஸ்பிஐ வங்கியின் 444 நாள் அம்ரித் விருஷ்டி திட்டம் பொது குடிமக்களுக்கு 6.60%, மூத்த குடிமக்களுக்கு 7.10% மற்றும் சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 7.20% வட்டி வழங்குகிறது. இந்த திட்டத்தின் காலக்கெடு முன்னதாக நீட்டிக்கப்பட்ட நிலையில், வங்கி இன்னும் புதிய இறுதி தேதியை அறிவிக்கவில்லை.
சுருக்கமாகச் சொன்னால், இந்த சிறப்பு FD திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கு சற்று சிறந்த வருமானத்தைப் பெற ஒரு வாய்ப்பை வழங்குகின்றன. காலக்கெடு நெருங்கி வருவதால், குறிப்பாக இந்தியன் வங்கி மற்றும் IDBI வங்கியில், பாதுகாப்பான மற்றும் நிலையான முதலீட்டு விருப்பத்தைக் கருத்தில் கொள்ளும் முதலீட்டாளர்களுக்கு இந்த திட்டங்கள் சிறந்ததாக இருக்கலாம்.
August 31, 2025 1:01 PM IST

