சிங்கப்பூரில் ஜூன் 6 ஆம் தேதியன்று மனிதவள அமைச்சகம்(MOM) ஓர் அறிக்கையை வெளியிட்டது.
சில்லறை ஊழியர்களுக்கு குறைவான ஊதியத்தை தொடர்ந்து வழங்கிய இரண்டு தவறான முதலாளிகள் குறைந்த ஊதியம் வழங்கும் முறை சரி செய்யப்படும் வரை வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒர்க் பெர்மிட்டுக்கு விண்ணப்பிப்பதோ அல்லது புதுப்பிப்பதோ முடியாது என்று அதில் குறிப்பிட்டுள்ளது.
மனிதவள அமைச்சகம் குறிப்பிட்டுள்ள இரண்டு முதலாளிகளும் சில்லறை விற்பனைக் கடை நடத்தி வருகின்றனர்.அவர்கள் வேலை அனுமதியில் வெளிநாட்டு ஊழியர்களை எடுப்பதை ரத்து செய்துள்ளது.
அவர்கள் 12 சில்லறை ஊழியர்களுக்கு ஏப்ரல் 2023-ஆம் ஆண்டு முதல் ஒரு மாதத்திற்கு ஒரு நபருக்கு சுமார் $450 குறைவாக சம்பளம் கொடுத்துள்ளனர். அவர்கள் வழங்கிய சம்பளமானது குறைந்த சம்பளம் என்று மனிதவள அமைச்சகம் கூறியது.

