• Login
Monday, April 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

குறிவைக்கப்பட்ட அணு உலைகள்… ஈரான் மீது அமெரிக்கா நடத்திய ஆபரேஷனுக்கு என்ன பெயர் தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
June 22, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
குறிவைக்கப்பட்ட அணு உலைகள்… ஈரான் மீது அமெரிக்கா நடத்திய ஆபரேஷனுக்கு என்ன பெயர் தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 22, 2025 10:13 PM IST

ஈரானின் அணு உலைகளை குறிவைத்து நடத்திய ஆபரேஷனுக்கு அமெரிக்கா வைத்துள்ள பெயர் என்ன தெரியுமா?

News18News18
News18

ஈரானின் அணு உலைகளை குறிவைத்து நடத்திய தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர், அதாவது நள்ளிரவு சுத்தியலடி’ என அமெரிக்கா பெயர் வைத்துள்ளது.

ஈரானில் 25 நிமிடம் நடத்திய தாக்குதல் குறித்து, கூட்டுப் படைத் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் விளக்கம் தந்துள்ளார். அதன்படி, ஈரானுக்கு எதிரான அமெரிக்க ராணுவ நடவடிக்கையில் 7 B-2 குண்டுவீச்சு விமானங்கள், எரிபொருள் நிரப்பும் டேங்கர்கள், உளவு விமானங்கள், போர் விமானங்கள் உட்பட 125க்கும் மேற்பட்ட விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக விவரித்தார்.

முதலில் மாலை 5 மணியளவில் ஈரானில் உள்ள இஸ்பஹான் அணுசக்தி நிலையம் மீது நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை மாலை 6.40 மணிக்கு வான்வழி தாக்குதல் தொடங்கப்பட்டதாக கூட்டுப் படைத் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் விளக்கம் தந்தார்.

அதன்படி இஸ்பஹானில், டோமாஹாக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பார்டோ, நடான்ஸ் அணுமின் நிலையங்கள் மீது பி-2 விமானங்கள் மூலம் 14 பங்கர் பஸ்டர் வெடிகுண்டுகள் வீசப்பட்டதாகவும் விவரித்துள்ளார்.

மீதமுள்ள குண்டுவீச்சு விமானங்கள் பின்னர் தங்கள் இலக்குகளைத் தாக்கிவிட்டு, இரவு 7 மணிக்கெல்லாம் ஈரானை விட்டு பத்திரமாக வெளியேறி விட்டதாகவும், ஈரானுக்குள் நுழையும்போதோ அல்லது வெளியேறும்போதோ எந்த துப்பாக்கிச்சூடும் நடத்தப்படவில்லை என்றும் விளக்கம் தந்துள்ளார்.

மிசோரியில் உள்ள ஒரு தளத்திலிருந்து நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதல், 2001 செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பிறகு B2 ரக விமானங்கள் நிகழ்த்திய மிகப்பெரிய ராணுவ நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

June 22, 2025 10:13 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

குறிவைக்கப்பட்ட அணு உலைகள்… ஈரான் மீது அமெரிக்கா நடத்திய ஆபரேஷனுக்கு என்ன பெயர் தெரியுமா?

Read More

Previous Post

7 மாதங்களுக்கு முன்பே நாங்கள் அறிவித்த திட்டம்: நிதிஷ் மீது தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு | Tejashwi Yadav accuses Nitish

Next Post

ஆயுதமேந்திய கொள்ளைக்கு முயன்றதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்களை தேடி வரும் போலீசார் | Makkal Osai

Next Post
ஆயுதமேந்திய கொள்ளைக்கு முயன்றதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்களை தேடி வரும் போலீசார் | Makkal Osai

ஆயுதமேந்திய கொள்ளைக்கு முயன்றதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்களை தேடி வரும் போலீசார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin