ரெம்பாவ்:
நேற்று மதியம் 1.15 மணியளவில் ஜாலான் சிரம்பான்-தாம்பின் சாலையின் 32.5 ஆவது கிலோமீட்டரில் மூன்று கார்கள் மோதிய விபத்தில், குர்ஆன் ஓதும் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.
அந்த மாது இங்குள்ள மதரஸா போங்கேக்கில் குர்ஆன் ஓதும் வகுப்பு முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார் என்று, ரெம்பாவ் போலீஸ் தலைமை துணை கண்காணிப்பாளர் ஷேக் அப்துல் காதர் ஷேக் முகமட் கூறினார்.
அவரது கூற்றுப்படி, 66 வயதான பாதிக்கப்பட்ட ஜஹாரியா ஷெரீஃப் ஓட்டிய பெரோடுவா ஆக்ஸியா கார், புரோட்டோன் ஈஸ்வரா மற்றும் புரோட்டான் வீரா ஆகிய இரண்டு கார்களுடன் மோதி விபத்துக்குள்ளானது.
“ரெம்பாவ் திசையில் இருந்து தாம்பினை நோக்கி வந்த பாதிக்கப்பட்டவர் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்து, எதிர் திசையில் இருந்து சென்ற 49 வயதுடைய நபர் ஓட்டிச் சென்ற புரோட்டான் ஈஸ்வராவில் மோதியதாக நம்பப்படுகிறது.
பின்னர், புரோட்டான் ஈஸ்வராவின் பின்புறத்திலிருந்த 22 வயதுடைய நபர் ஓட்டிச் சென்ற புரோட்டான் வீரா கார், பாதிக்கப்பட்டவரின் காரை இடதுபுறத்தில் மோதியது என்று அவர் கூறினார்.
விபத்துக் காரணமாக உடல் மற்றும் தலையில் பலத்த காயங்களுக்குள்ளன அந்த பெண் சம்பவ இடத்திலேயே இறந்தார், புரோட்டான் வீராவின் ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார், மேலும் புரோட்டான் ஈஸ்வராவின் ஓட்டுநர் ரெம்பாவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
சாலைப் போக்குவரத்துச் சட்டம் (APJ) 1987 பிரிவு 41(1)ன் கீழ் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.


