• Login
Thursday, July 31, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

குருநாகலில் புதிய 3S வசதியை திறந்து நாடு முழுவதும்  தனது வலையமைப்பை விரிவுபடுத்தும் BYD

GenevaTimes by GenevaTimes
July 30, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
குருநாகலில் புதிய 3S வசதியை திறந்து நாடு முழுவதும்  தனது வலையமைப்பை விரிவுபடுத்தும் BYD
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலகின் முன்னணி மாற்று சக்தி வாகனங்களின் (New Energy Vehicle) உற்பத்தியாளரான BYD நிறுவனம் மற்றும் அதன் இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto (JKCG Auto) நிறுவனத்துடன் இணைந்து 2025 ஜூலை 23 ஆம் திகதி குருநாகலில் தனது முழுமையான 3S வசதிகளைக் கொண்ட சேவை நிலையத்தை திறந்து வைத்துள்ளது. 

குருநாகல், கொழும்பு வீதியில் போயகனேயில் உள்ள மல்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள இப்புதிய நிலையம், கொழும்பு யூனியன் பிளேஸில் உள்ள முதலாவது 3S வசதிகளைக் கொண்ட சேவை நிலையத்திற்குப் பின், ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ ((JKCG Auto) நிறுவனத்திற்கு சொந்தமான இலங்கையிலுள்ள இரண்டாவது நிறுவனமாக இடம்பிடித்து மற்றுமொரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது. 

இந்த அதிநவீன 3S வசதிகள் மூலம் விற்பனை, பழுதுபார்ப்பு சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் ஆகிய அனைத்து செயல்பாடுகளையும் ஒரே கூரையின் கீழ் வழங்கி, வாடிக்கையாளர்களுக்கு முழுமையான வாகன தீர்வுகளுடன் மேம்படுத்தப்பட்ட வசதிகளையும் வழங்குகிறது.

இப்புதிய சேவை நிலையம் குறித்து John Keells CG Auto வின் பிரதம நிறைவேற்று அதிகாரி சரித் பண்டிதரட்ன கருத்து தெரவிக்கையில், ‘குருநாகலில் எமது புதிய சேவை நிலையத்தை திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். கொழும்புக்கு வெளியே எமது முதல் முழுமையான சொந்த 3S வசதியாக, இந்த சேவை நிலையம் வாகனம் வாங்குவதில் இருந்து விற்பனைக்குப் பின்னரான சேவை வரை, அனைத்து இலங்கையர்களுக்கும் தடையற்ற வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும். அதேசமயம், வடமேல் மாகாணத்தில் எமது இருப்பையும் வலுப்படுத்துகிறது. இந்த வசதி எமது வாடிக்கையாளர்கள் தங்கள் வாகன உரிமை பயணம் முழுவதும் அதிக வசதி, பராமரிப்பு மற்றும் தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்க உதவுகிறது.’ எனத் தெரிவித்தார். 

புதிய 3S வசதி மூலம் நிலையான போக்குவரத்து தீர்வுகளுக்கான அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய BYD செயல்படுகிறது. மேலும், இதன் மூலம் வடமேல் மாகாணத்தின் முக்கிய வர்த்தக நகரமான குருநாகல் நகரில் சுற்றுச்சூழலுக்கு உகந்த நட்பு வாகனங்கள் குறித்து அதிக ஆர்வம் காட்டும் வாடிக்கையாளருக்கு நிலையான தீர்வுகளைக் கொண்டுவரவும் முடியும்.

இந்த புதிய காட்சியறையில் BYD இன் உயர்தரமான மின்சார மற்றும் plug-in hybrid வாகனங்களின் பல தயாரிப்புகளைப் பார்வையிடவும் வாங்கவும் வாடிக்கையாளருக்கு வாய்ப்பு உள்ளது. இந்த தயாரிப்புகளில் பெரும்பாலானவை BYD இன் தனித்துவமான DM-i super hybrid தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பான Blade பேட்டரியுடன் கூடியவை.

அதன் ஆற்றல் திறன், நீடிக்கப்பட்ட மின் வரம்பு மற்றும் சர்வதேச தரத்திலான பேட்டரி பாதுகாப்புடன், இதுவரை அனுபவிக்காத ஒப்பற்ற ஓட்டுதல் அனுபவத்தை BYD வாகனம் வாங்குபவர்களுக்கு வழங்குவது உறுதி. மேலும், இந்த ஒருங்கிணைந்த காட்சியறை மற்றும் உதிரிபாகங்கள் வசதியின் சிறப்பம்சம் என்னவென்றால், வாகன விற்பனைக்கு மேலதிகமாக உதிரிபாகங்களை வழங்குவதன் மூலம், வாடிக்கையாளருக்கு அசல் உதிரிப்பாகங்கள் மற்றும் தொழில்முறை பராமரிப்பு, பழுதுபார்ப்பு சேவைகளை அதே வசதியிலிருந்தே பெற முடியும் என்பவற்றை உறுதிப்படுத்த BYD நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த புதிய 3S வசதி காட்சியறையின் திறப்பு விழாவை முன்னிட்டு, ஜூலை 25 முதல் 27 வரை ஒரு சிறப்பு பரீட்ச்சார்த்த வாகன ஓட்ட வாய்ப்புகளை வாடிக்கையாளருக்கு வழங்க JKCG Auto ஏற்பாடு செய்துள்ளது. கொழும்பில் அண்மையில் நடத்தப்பட்ட அத்தகைய பரீட்ச்சார்த்த வாகன ஓட்டமானது மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றதால், அவ் வாய்ப்பை குருநாகல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வழங்குவதன் மூலம், BYD இன் உயர்தரமான மின்சார மற்றும் plug-in hybrid வாகனங்களின் சிறப்புத்தன்மையை நேரடியாக அனுபவிக்க முடியும்.

தற்போது மேல், தென், மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் அனுபவிக்கும் BYD வாகனங்களை நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளருக்குக் கொண்டு செல்லும் சிறப்பு மைல்கல்லை குறிக்கும் தருணமாக குருநாகலில் உள்ள 3S வசதி காட்சியறையைக் குறிப்பிடப்படலாம்.

தற்போது கொழும்பு, நீர்கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கராப்பிட்டிய, மாத்தறை, தங்கல்ல, புத்தளம் மற்றும் கண்டி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 15க்கும் மேற்பட்ட மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை ஸ்தாபிக்க உதவியுள்ள JKCG Auto நிறுவனம், அதன் மூலம் நாடு முழுவதும் உள்ள மின்சார வாகன உரிமையாளர்களுக்கு பெரும் வசதியை வழங்க முடிந்துள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

ஜப்பான் சுனாமி எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து மலேசியா எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தியது – Malaysiakini

Next Post

இன்று மாலை விண்ணில் பாய்கிறது நிசார் செயற்கைக்கோள்!

Next Post
இன்று மாலை விண்ணில் பாய்கிறது நிசார் செயற்கைக்கோள்!

இன்று மாலை விண்ணில் பாய்கிறது நிசார் செயற்கைக்கோள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin