ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை நோய் புதிய கொரோனா தொற்று அல்ல என உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை நோய் புதிய கொரோனா தொற்று அல்ல என்றும், இதனை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு தெரியும் என்றும் உலக சுகாதார அமைப்பு அதிகாரி ஹன்ஸ் க்ளூஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய இயக்குநர் ஹன்ஸ் க்ளூஜ், நாம் ஒன்றாக இணைந்து இந்த குரங்கு அம்மை நோயை சமாளிக்க முடியும் என்றும், நாம் சமாளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
Also Read:
எலான் மஸ்க்குக்கு அமைச்சர் பதவி… பரப்புரையின்போது அறிவித்த டொனால்ட் டிரம்ப்…
குரங்கு அம்மை நோய் புதிய கொரோனா தொற்று அல்ல!
நாம் குரங்கு அம்மை நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை பின்பற்றி உலகெங்கும் இந்த நோய் பரவலை முற்றிலும் அழிக்க போகிறோமா? அல்லது இதனை புறக்கணித்து மீண்டும் அச்சத்தின் சூழலில் சிக்கப் போகிறோமா நாம் எவ்வாறு இந்த நோயை எதிர்கொள்கிறோம் என்பதில் தான் நாம் இந்த குரங்கு அம்மை நோயில் இருந்து மீள்வதற்கான வழி இருக்கிறது என தெரிவித்தார். மேலும் இந்த குரங்கு அம்மை நோய் புதிய கொரோனா தொற்று அல்ல என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
குரங்கு அம்மை நோயின் புதிய கிளேட் 1 வகை நோய் மீது அதிக கவனம் செலுத்துவதால், குறைந்த தீவிரம் கொண்ட கிளேட் 2 வகை மீதும் கவனம் செலுத்தும் வாய்ப்பு கிடைக்கிறது. இதன்மூலம் ஐரோப்பாவில் சிறந்த பொது சுகாதார ஆலோசனைகள் மற்றும் கண்காணிப்பையும் வழங்க முடிவதாகவும் ஹன்ஸ் க்ளூஜ் தெரிவித்தார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)