• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கும்பமேளா கூட்ட நெரிசலில் 30 பேர் பலி : உச்சநீதிமன்றம் சென்ற பொதுநல வழக்கு

GenevaTimes by GenevaTimes
January 30, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
கும்பமேளா கூட்ட நெரிசலில் 30 பேர் பலி : உச்சநீதிமன்றம் சென்ற பொதுநல வழக்கு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:January 30, 2025 11:26 AM IST

Maha Kumbh stampede | 1954-ல் தொடங்கி தற்போது நடைபெறும் மகா கும்பமேளா வரை கூட்ட நெரிசல் ஏற்படுவது வழக்கமாக உள்ளதாகவும் பொதுநல வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

News18News18
News18

மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததற்கு, உத்தரப்பிரதேச மாநில அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

விஷால் திவாரி என்ற வழக்கறிஞர் தொடர்ந்துள்ள இந்த பொதுநல வழக்கில், கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், உத்தரப்பிரதேச மாநில அரசின் நிர்வாக குளறுபடி, அலட்சியம் மற்றும் பாதுகாப்பு குறைப்பாட்டை சுட்டிக்காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து மாநிலங்களும் ஒருங்கிணைந்து பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பொது நல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, கும்பமேளா நடைபெறும் இடத்தில் அனைத்து மாநிலங்களின் உதவி மையம் இருக்க வேண்டும் என்றும், அதன் மூலம், தங்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் தகவல்களை பக்தர்கள் பெற்றுக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வழிகாட்டு பலகைகள், அடிப்படை தகவல்கள் அனைத்து மொழிகளிலும் இடம்பெற்றிருந்தால், பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து வரும் பக்தர்களுக்கு உதவியாக இருக்கும் என்று பொதுநல மனுவில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மகா கும்பமேளாவில் 30 பேர் பலி: கூட்ட நெரிசல் ஏற்பட்டது எப்படி? – விளக்கமளித்த உ.பி காவல் துறை!

விஐபிகளின் வருகையால், சாதாரண பக்தர்களின் பாதுகாப்பை எவ்விதத்திலும் சமரசம் செய்யக்கூடாது என்று சுட்டிக்காட்டியுள்ள வழக்கறிஞர், கூட்ட நெரிசல் தொடர்பாக உத்தரப்பிரதேச அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடுமாறு குறிப்பிட்டுள்ளார்.

1954-ல் தொடங்கி தற்போது நடைபெறும் மகா கும்பமேளா வரை கூட்ட நெரிசல் ஏற்படுவது வழக்கமாக உள்ளதாகவும் பொதுநல வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

First Published :

January 30, 2025 11:26 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

Maha Kumbh Stampede | மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் 30 பேர் பலி : உ.பி அரசு பொறுப்பு ஏற்க வேண்டும் – உச்சநீதிமன்றம் சென்ற பொதுநல வழக்கு

Read More

Previous Post

அதிரும் உக்ரைன் : இரவிரவாக பாரிய தாக்குதலை நடத்திய ரஷ்யா

Next Post

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து 110 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கிறது இஸ்ரேல் | Israel Releases Prisoners After Hostage Handover

Next Post
காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து 110 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கிறது இஸ்ரேல் | Israel Releases Prisoners After Hostage Handover

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து 110 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கிறது இஸ்ரேல் | Israel Releases Prisoners After Hostage Handover

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin