Last Updated:
மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தை ஒட்டியுள்ள அரையல் கிராமத்தைச் சேர்ந்த பிண்டு மஹ்ரா குடும்பத்தினர் மகா கும்பமேளாவுக்கு வந்த பக்தர்களை 130 படகுகளில் ஏற்றிச் சென்ற வகையில், 30 கோடி ரூபாய் வருமானம் ஈட்டினார்
மகா கும்பமேளாவின் போது படகு ஓட்டி கோடிக்கணக்கில் சம்பாதித்தவருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மகா கும்பமேளாவில் 30 கோடி ரூபாய் சம்பாதித்த படகோட்டி குடும்பத்துக்கு சுமார் 13 கோடி ரூபாய் வரி செலுத்தக் கோரி வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா, பிப்ரவரி 26 ஆம் தேதி நிறைவடைந்தது. இதில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து 60 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
திரிவேணி சங்கமத்தை ஒட்டியுள்ள அரையல் கிராமத்தைச் சேர்ந்த பிண்டு மஹ்ரா குடும்பத்தினர் மகா கும்பமேளாவுக்கு வந்த பக்தர்களை 130 படகுகளில் ஏற்றிச் சென்ற வகையில், 30 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அண்மையில் பெருமிதம் தெரிவித்திருந்தார்.
ஆனால், குற்றப்பின்னணி கொண்ட பிண்டு குடும்பத்தினர் 30 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது பற்றி விசாரிக்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், 30 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதற்காக 12 கோடியே 80 லட்சம் ரூபாய் வரி செலுத்தும்படி பிண்டு குடும்பத்திற்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கஷ்டப்பட்டு மாதம் 15 ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டி வந்த பிண்டு மஹ்ரா ஒரே மாதத்தில் கோடீஸ்வரர் ஆன நிலையில், தற்போது வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
March 15, 2025 3:58 PM IST
கும்பமேளாவில் ஒரே மாதத்தில் ரூ.30 கோடி சம்பாதித்த நபர்.. வருமான வரி எவ்வளவு தெரியுமா? – ஷாக் ஆவீங்க!


