• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

குமரி சந்தைகளில் காய்கறி வரத்து அதிகரித்தது… தக்காளி, வெங்காயம் விலை தெரியுமா…

GenevaTimes by GenevaTimes
July 11, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
குமரி சந்தைகளில் காய்கறி வரத்து அதிகரித்தது… தக்காளி, வெங்காயம் விலை தெரியுமா…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழகத்தில் காலநிலை மாற்றம் காரணமாக விவசாயத்தில் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் கடந்த வாரங்களில் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்து வந்தது. இந்நிலையில் ஜூன் மாதம் பெய்த மழையின் காரணமாகத் தற்போது பல இடங்களிலும் விளைச்சல் வரத்துவங்கியுள்ளது. சந்தைகளுக்குக் காய்கறி வரத்து அதிகரித்துள்ளதால் விலையும் சீராகியுள்ளது.

அந்த வகையில் தமிழகத்தின் கடைக்கோடி பகுதியான கன்னியாகுமரி பகுதியிலும் காய்கறிகள் விளைச்சல், அதிகரித்துள்ளது. மேலும் பிற இடங்களிலிருந்தும் கன்னியாகுமரி காய்கறிச் சந்தைக்குக் காய்கறி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கன்னியாகுமரி காய்கறிச் சந்தைகளில் காய்கறி விலை குறைந்து வருகிறது.

விளம்பரம்

கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்த வரையில் நாகர்கோவிலில் உள்ள அப்டா, வடசேரியில் காய்கறி சந்தைகள் பிரதானச் சந்தைகளாக உள்ளன. இதே போன்று ஆரல்வாய்மொழி, காவல்கிணறு பகுதிகளிலும் காய்கறி சந்தைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் கன்னியாகுமரி சந்தையில் தற்போதைய காய்கறிகளின் விலைப் பட்டியலைத் தற்போது பார்க்கலாம்…

இதையும் படிங்க: அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவிகளுக்கும் இனி மாதம் ரூ.1000… புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம்…

இன்றைய விலை அடிப்படையில் இஞ்சி கிலோ 120க்கும், தக்காளி கிலோ 35க்கும், சின்ன வெங்காயம் கிலோ 60க்கும், பெரிய வெங்காயம் கிலோ 40க்கும், கேரட் கிலோ 40க்கும், பீட்ரூட் கிலோ 13க்கும், பீன்ஸ் கிலோ 40க்கும், பச்சை மிளகாய் கிலோ 20க்கும், வெண்டைக்காய் விலை 15க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விளம்பரம்

மேலும், கத்தரிக்காய் கிலோ 20க்கும், பூசனிக்காய் கிலோ 10க்கும், பாகற்காய் கிலோ 15க்கும், புடலை கிலோ 5க்கும், மாங்காய் கிலோ 20க்கும், வெள்ளரிக்காய் கிலோ 60க்கும், முருங்கைக்காய் கிலோ 40க்கும், உருளைக்கிழங்கு கிலோ 25க்கும், பூண்டு கிலோ 150க்கும், காலிஃப்ளவர் கிலோ 50க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், “வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து காய்கறிகளின் வரத்து அதிகரித்து உள்ளதால் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. தக்காளி விலையைப் பொறுத்தவரையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் கணிசமாக விலை குறைந்துள்ளது. காய்கறிகளின் விலை குறைவால் பொதுமக்கள், உணவகம் நடத்துவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்” எனத் தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

விளம்பரம்

.

Read More

Previous Post

சாம்பியன்ஸ் கோப்பைக்கு இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது

Next Post

Elon Musk: `பரிகாரமாக ஒரு வாரத்துக்கு ஆம்லேட் சாப்பிடமாட்டேன்' – எலான் மஸ்க் கிண்டல்… காரணம் என்ன?

Next Post
Elon Musk: `பரிகாரமாக ஒரு வாரத்துக்கு ஆம்லேட் சாப்பிடமாட்டேன்' – எலான் மஸ்க் கிண்டல்… காரணம் என்ன?

Elon Musk: `பரிகாரமாக ஒரு வாரத்துக்கு ஆம்லேட் சாப்பிடமாட்டேன்' - எலான் மஸ்க் கிண்டல்... காரணம் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin