சிங்கப்பூர்: தவறுதலாக குப்பையில் வீசப்பட்ட $4000 மதிப்புள்ள தங்க கைச்செயினை கண்டுபிடித்து கொடுத்த வெளிநாட்டு ஊழியருக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளன.
பாலர் பள்ளி ஒன்றில் துணை முதல்வராக பணிபுரிபவர் ரியா, இவர் செங்காங்கில் உள்ள தனது வீட்டில் இருந்து வேலைக்கு செல்ல புறப்பட்டு சென்றார்.
சிங்கப்பூர் தேசிய தினத்தில் பிறந்த குழந்தை – மகிழ்ச்சியில் பெற்றோர்!
கைச்செயினை காணவில்லை
அப்போது, அந்த தங்க கைச்செயினையும் குப்பைப் பையையும் ஒன்றாக பிடித்துக் கொண்டிருந்தது சட்டென்று அவருக்கு நினைவுக்கு வந்தது.
செல்லும் வழியில், தனது கைச்செயினை காணவில்லை என்பதை உணர்ந்த ரியா, தவறுதலாக அதை குப்பையுடன் தூக்கி எறிந்துவிட்டோமோ என்று யோசித்தார். பின்னர் உடனே விரைந்து தனது வீட்டுக்கு புறப்பட்டார்.
அங்கும் கைச்செயினை காணவில்லை, உடனே அவரின் புளாக்கின் அறிவிப்புப் பலகையில் பட்டியலிடப்பட்ட பராமரிப்பு ஊழியர்களின் எண்ணை அழைக்க முடிவு செய்தார்.
அப்போது ரியாவின் அழைப்புக்கு பதில்கொடுத்த நபர், துப்புரவு ஒப்பந்ததாரரின் கீழ் பணிபுரியும் தள மேற்பார்வையாளர் தவ்ஹித் என்ற வெளிநாட்டு ஊழியர் ஆவார்.
காலை உணவை சாப்பிட்டுக்கொண்டிருந்த தவ்ஹித் வெறும் 10 நிமிடத்தில் புளாக்குக்கு விரைந்து சென்றார், பின்னர் குப்பையிலிருந்து கைச்செயினை மீட்டெடுக்கவும் அவர் உதவினார்.
தேசிய தின சிறப்பு TOTO: இந்திய மதிப்பில் 37 கோடி – வென்று மாஸ் காட்டிய அதிஷ்டசாலி நபர்!
வெளிநாட்டு ஊழியருக்கு பரிசு
அவரது செயலை நன்றியுடனும் நெகிழ்வுடனும் பார்த்த ரியா, அவருக்கு சில ஆடைகளை அன்பளிப்பாக கொடுத்தார்.
மேலும் தனது பாலர் பள்ளி மாணவர்களால் வரையப்பட்ட ஒரு வரைபடத்தையும் பரிசாக அவருக்கு அளித்தார்.
அவர் எப்போது வருவார் என ஊழியருக்காக காத்திருந்தபோது என் இதயம் படபடவென வேகமாக துடித்தது என்று ரியா Mothership-பிடம் கூறினார்.
ஆழமான உணர்வுபூர்வமான நினைவுகளை கொண்ட அந்த கைச்செயினையே ரியா கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வைத்திருந்ததாக சொன்னார்.
வெளிநாட்டு ஊழியர்களான 7 தமிழர்களுக்கும் குவிந்துகொண்டே இருக்கும் அன்பளிப்பு & விருதுகள்

