• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

குப்பைத் தொட்டியில் இருந்து 20 அடி நீள மலைப்பாம்பைப் பிடித்த நபர் – ஷாக் தரும் வீடியோ | உலகம்

GenevaTimes by GenevaTimes
August 12, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
குப்பைத் தொட்டியில் இருந்து 20 அடி நீள மலைப்பாம்பைப் பிடித்த நபர் – ஷாக் தரும் வீடியோ | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் மையத்தில் உள்ள தி பியரோ அடுக்குமாடி குடியிருப்புகளின் பார்க்கிங் கேரேஜில், 20 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று குப்பைத் தொட்டியின் மேல் காணப்பட்டதால் குடியிருப்பாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். விலங்கு கட்டுப்பாடு மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை (LAPD) உடனடியாக பதிலளிக்க முடியாத சூழலில், ரெப்டைல் நிபுணர் ஜோசப் ஹார்ட்டுக்கு அவசர அழைப்பு வந்தது.

இதையடுத்து, ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் மட்டுமே அணிந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த ஹார்ட், எவ்வித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல், அமைதியாக குப்பைத் தொட்டிக்குள் இறங்கி, பாம்பின் தலையை கவனமாகப் பிடித்தார். அவரது திறமையான பிடி பாம்பு கடிக்க முடியாதபடி தடுக்கப்பட்டதுடன், பயமுறுத்தி வந்த பாம்பையும் அவர் கட்டுக்குள் கொண்டு வந்தார். “அந்த பாம்பு அங்கிருந்து நகர விரும்பவில்லை. ஏனெனில், அங்கு அதிகமான மக்கள் கூடியிருந்தார்கள், அதைப் பார்க்கும் போது, அது நல்ல பயமும், மன அழுத்தமும் அடைந்திருந்தது என்பது தெளிவாக தெரிந்தது” என்று அவர் கேசிஏஎல்-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

பின்னர் ஹார்ட், இந்த பாம்பு மீட்பு வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, அதை “இது ஒரு நல்ல மற்றும் பழைய பாணியிலான ரெப்டைல் ராங்க்ளிங்” என்று அவர் வர்ணித்தார். மேலும் அவர், அந்த பாம்புக்கு ஆப்பிள்ஸ் என்றும் பெயரிட்டார் மற்றும் அதன் துயரமான பின்னணியையும் வெளிப்படுத்தினார்.

அவரது பதிவின்படி, அந்த பாம்பு சிறிய தொட்டி ஒன்றில் அடுக்குமாடி குடியிருப்பின் குப்பைத் தொட்டியில் கைவிடப்பட்டிருந்தது. மோசமான பராமரிப்பால், அதற்கு கடுமையான வாய் தொற்று ஏற்பட்டிருந்தது, இது செல்லப்பிராணி வணிகத்தில் பாம்புகளுக்கு பொதுவான பிரச்சனையாகும். “இது எனக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது” என்று ஹார்ட் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதன், “முந்தைய உரிமையாளர், கால்நடை மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியாமல், அதற்கு சிகிச்சை அளிக்க முடியாமல் கைவிட்டிருக்கலாம். ஆனால், ஒரு விலங்கை இவ்வாறு கைவிடுவது ஒருபோதும் தீர்வாகாது.” என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பாம்பைப் பிடித்த பிறகு, ஹார்ட் அங்கிருந்த குடியிருப்பாளர்களுக்கு மலைப்பாம்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தற்போது ஆப்பிள்ஸ் ரிவர்சைடில் சிகிச்சைப் பெற்று வருகிறது, மேலும் பல மாதங்கள் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் மற்றும் சரியான பராமரிப்புக்குப் பிறகு முழுமையாக குணமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனது சமூக வலைத்தள பக்கத்தில், ஹார்ட் தனது நோக்கம் “விலங்குகள் மறுவாழ்வு மற்றும் பொதுக் கல்வி மூலம் வனவிலங்குகளின் பாதுகாப்பை மேம்படுத்துவது தான்” என்று தெரிவித்துள்ளார். புளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையத்தின் தகவலின்படி, தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புகள், உலகின் மிகவும் நீளமான பாம்பு இனங்களில் ஒன்றாகும்.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

August 12, 2025 6:52 PM IST

Read More

Previous Post

மாலையில் கடகடவென இறங்கிய தங்கம் விலை… இதுதான் சரியான நேரம்..! | தமிழ்நாடு

Next Post

இந்தோனேசிய செவிலியர்களை ஆட்சேர்ப்பு செய்வது குறித்த விரிவான ஆய்வை சுகாதார அமைச்சகம் வரவேற்கிறது – Malaysiakini

Next Post
இந்தோனேசிய செவிலியர்களை ஆட்சேர்ப்பு செய்வது குறித்த விரிவான ஆய்வை சுகாதார அமைச்சகம் வரவேற்கிறது – Malaysiakini

இந்தோனேசிய செவிலியர்களை ஆட்சேர்ப்பு செய்வது குறித்த விரிவான ஆய்வை சுகாதார அமைச்சகம் வரவேற்கிறது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin