• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

குபேரனை வழிபட்டால் வீட்டில் செல்வம் பெருகும் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 13, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
குபேரனை வழிபட்டால் வீட்டில் செல்வம் பெருகும் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செல்வத்தின் அதிபதியாக மகாலட்சுமி தேவியையே குறிப்பிடுகிறோம். செல்வத்தை வேண்டி மகாலட்சுமியை வணங்கும் போது அவருடைய பரிபூரண அருளை பெற்ற குபேரனையும் வழிபடுவதால் நமக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பொன், பொருள் என அனைத்து வகையான செல்வங்களையும் வாரி வழங்கக்கூடிய குபேர பகவானுக்கு உகந்த கிழமை வியாழக்கிழமை ஆகும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கும், சுக்கிரனுக்கும் உரிய நாள் என்பதை போன்று, வியாழக்கிழமை குபேரனை வழிபடுவதற்குரிய நாளாகும்.

வியாழக்கிழமையன்று அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டை சுத்தம் செய்து, வாசலில் பச்சரிசி மாவில் கோலம் போட வேண்டும். நிலைவாசலில் சந்தனம், மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். அதற்கு பிறகு வீட்டின் பூஜையறையில் குபேரர் படத்தை வைத்து, தாமரை மலர், சங்கு ஆகியவற்றை இருபுறமும் வைத்து விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். நெல்லி மரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளதால் குபேர பூஜையின் பொழுது கட்டாயம் நெல்லிக்கனியை வைத்து வழிபட வேண்டும். அவலுடன் சிறிதளவு பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நைவேத்தியமாக படைக்க வேண்டும். கண்ணனை போல் குபேரனுக்கும் மிகவும் பிடித்தமான உணவு அவலாகும். அதனால் குபேரனுக்கு அவல் படைத்து வழிபட்டால் அவரது அருள் கிடைத்து, குடும்பத்தில் அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

வியாழக்கிழமை அன்று குபேர விளக்கு (அல்லது அகல் விளக்கு) மற்றும் மனை அல்லது தட்டிற்கு மஞ்சள், குங்குமத்தை ஒற்றைப்படையில் வைத்து அலங்கரித்து கொள்ள வேண்டும். குபேர விளக்கு வைக்கும் மனை அல்லது தட்டில் பச்சரிசியை பரப்பி, அதில் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து, பிறகு குபேர விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து குபேரருக்கு உகந்த பச்சை நிற திரி கொண்டு விளக்கு ஏற்ற வேண்டும். பச்சை நிற திரி இல்லையெனில் பஞ்சு திரியையும் பயன்படுத்தலாம். குபேரருக்கு உகந்த வடக்கு திசை நோக்கி விளக்கை ஏற்ற வேண்டும். குபேர விளக்கில் ஐந்து கற்கண்டு சேர்த்து விளக்கை சுற்றி வாசனை மலர்கள் வைக்க வேண்டும். கற்கண்டு சேர்ப்பது பணவரவை அதிகரிக்க செய்யும்.

வடக்கு நோக்கி நிலைவாசலிலும் ஒரு விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். குபேரனை வீட்டின் வாசலில் வைத்து பூஜித்தால், நமது செல்வத்திற்கு பாதுகாப்பும், செழிப்பும் உண்டாகும். குபேர மந்திரத்தை மனதில் உச்சரித்துக் கொண்டு விளக்கு ஏற்றுவது சிறப்பானதாகும். ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலை 5 மணியிலிருந்து 8 மணிக்குள் வீட்டு நிலை வாசற்படியில் இவ்வாறு வடக்கு திசை நோக்கி குபேர விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் வீட்டில் எப்போதும் செல்வம் குறையாமல் பெருகிக் கொண்டே இருக்கும். கடன் பிரச்சனைகள் தீரும், தொழில் வளர்ச்சி, லாபம் அதிகரிக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நோய் நொடிகள் அகலும்.



Read More

Previous Post

சந்தை மதிப்பில் மைக்ரோசாஃப்டை முந்திய ‘ஆப்பிள்’ – எல்லாம் ஏஐ மாயம்! | Apple overtakes Microsoft in market value AI magic

Next Post

கோன் ஐஸ்க்ரீமுக்குள் மனித விரல் – Thinakaran

Next Post
கோன் ஐஸ்க்ரீமுக்குள் மனித விரல் – Thinakaran

கோன் ஐஸ்க்ரீமுக்குள் மனித விரல் - Thinakaran

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin