• Login
Monday, September 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

குடும்ப வைத்தியர் பரிந்துரை இன்றி இனி வைத்தியசாலைக்குச் செல்ல முடியாது: ஜனாதிபதி அதிரடி – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 7, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
குடும்ப வைத்தியர் பரிந்துரை இன்றி இனி வைத்தியசாலைக்குச் செல்ல முடியாது: ஜனாதிபதி அதிரடி – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
குடும்ப வைத்தியர் பரிந்துரை இன்றி இனி வைத்தியசாலைக்குச் செல்ல முடியாது: ஜனாதிபதி அதிரடி

இலங்கையில் குடும்ப வைத்தியரின் பரிந்துரை இன்றி நேரடியாக வைத்தியசாலைக்குச் செல்ல முடியாத வகையில் புதிய சுகாதார முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் சுகாதார சேவையில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய சுகாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். 

பேருவளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

புதிய நடைமுறையின் கீழ், குடும்ப நல மருத்துவ மையங்கள் உருவாக்கப்பட்டு, அங்குள்ள குடும்ப வைத்தியரின் பரிந்துரை இன்றி நோயாளர்கள் நேரடியாக வைத்தியசாலைகளுக்குச் செல்ல முடியாத வகையில் முறைமை ஒன்று உருவாக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். 

தற்போது சந்தைக்குச் செல்பவர்கள் கூட வைத்தியசாலைக்குச் செல்லும் நிலை காணப்படுவதாகவும், நோயாளர்களே எந்த வைத்தியரைச் சந்திக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் வழக்கத்தை மாற்றி, இனி வைத்தியர்களே அதைத் தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் சனத்தொகை 22 மில்லியனாக உள்ள போதிலும், அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவுகளில் வருடாந்தம் 80 மில்லியன் பேர் மருந்துகளைப் பெறுகின்றனர். அதாவது ஒருவர் சராசரியாக 04 தடவைகள் வைத்தியசாலைக்குச் செல்கின்றனர். முறையான கொள்கையும் மருத்துவப் பரிந்துரைகளும் இல்லாததே, இந்த நிலைக்குக் காரணம் என அவர் தெரிவித்தார்.

இதனைச் சீரமைக்கும் நோக்கில், அடுத்த ஆண்டு முதல் 1,000 ஆரோக்கியா மையங்கள் ஊடாக குடும்பங்களுக்கு முதன்மைப் பராமரிப்பு வைத்தியரை அணுகும் வசதி ஏற்படுத்தப்படும். கொத்தமல்லி குடித்து ஓய்வெடுத்தாலே குணமாகக்கூடிய நோய்களுக்கு வீட்டிலேயே ஓய்வெடுக்க வேண்டும் என்றும், வைத்தியர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளை நோயாளர்கள் முறையாக முழுமையாக உட்கொள்ளாமல் பாதியிலேயே நிறுத்துவது வீணடிப்பும் ஒரு குற்றமும் ஆகும் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

ஹாடியின் 2014 அமெரிக்க ‘அரசாங்கத்தை கவிழ்த்து’ என்ற கூற்று தொடர்பில் 3 போலீஸ் புகார் | Makkal Osai

Next Post

தடை தாண்டி.. தமிழகத்திற்குள் பாய்ந்த காவிரி! டெல்டா மக்களுக்கு குட் நியூஸ்! | Mettur Dam inflow surges to 9,709 cusecs, water level rises

Next Post
தடை தாண்டி.. தமிழகத்திற்குள் பாய்ந்த காவிரி! டெல்டா மக்களுக்கு குட் நியூஸ்! | Mettur Dam inflow surges to 9,709 cusecs, water level rises

தடை தாண்டி.. தமிழகத்திற்குள் பாய்ந்த காவிரி! டெல்டா மக்களுக்கு குட் நியூஸ்! | Mettur Dam inflow surges to 9,709 cusecs, water level rises

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin