• Login
Wednesday, February 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

குடும்பிமலையில் மீட்கப்பட்ட கார்ல் குஸ்டாஃப்: கடல் புலிகளின் அபூர்வ கடற்படை ஆயுதம்

GenevaTimes by GenevaTimes
February 9, 2026
in இலங்கை
Reading Time: 2 mins read
0
குடும்பிமலையில் மீட்கப்பட்ட கார்ல் குஸ்டாஃப்: கடல் புலிகளின் அபூர்வ கடற்படை ஆயுதம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மட்டக்களப்பு – குடும்பிமலை பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் மீட்க்கப்பட்ட
ரொக்கெட் லோஞ்சர்கள் தொடர்பில் இலங்கை கடற்படையின் முன்னாள் பாதுகாப்புப் படைத் தலைவரான ஓய்வுபெற்ற அட்மிரல் ரவீந்திர சி. விஜேகுணரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.


ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செய்தியில், “ நன்றாக பாதுகாக்கப்பட்ட நிலையில் இருந்த 84 மி.மீ. கார்ல் குஸ்டாஃப்(Carl Gustaf) ரீகாய்லெஸ் ரொக்கெட் லோஞ்சர்கள்” எனவும் குறித்த ஆயுதங்களை அவர் அடிகோடிட்டு காட்டியுள்ளார்.



இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆபத்தான அயுதங்கள்




இன்று நான் வாசித்த ஒரு செய்திக் கட்டுரையின் படி, இலங்கை காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை (Special Task Force – STF), இராணுவ புலனாய்வு உதவியுடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் குடும்பிமலை பகுதியில் புதைக்கப்பட்டு நன்றாக பாதுகாக்கப்பட்ட நிலையில் இருந்த 84 மி.மீ. கார்ல் குஸ்டாஃப்(Carl Gustaf) ரீகாய்லெஸ் ரொக்கெட் லோஞ்சர்கள் மூன்றை மீட்டுள்ளது.

குடும்பிமலையில் மீட்கப்பட்ட கார்ல் குஸ்டாஃப்: கடல் புலிகளின் அபூர்வ கடற்படை ஆயுதம் | The Rare Naval Weapon Of The Sea Tigers



இவை முன்பு விடுதலைப் புலிகளால் (LTTE) பயன்படுத்தப்பட்டவை.

இந்த ஆபத்தான அயுதங்கள் 1990-களில் இலங்கை கடற்படையின் கப்பல்கள் மற்றும் சிறிய கடற்படை craft களை எதிர்த்து நடைபெற்ற கடற்போரில், விடுதலைப்புலிகளின் கடல் புலி (Sea Tiger) பிரிவால் பயன்படுத்தப்பட்டன.



இது தொடர்பில் முதல் பதிவான சம்பவம் 1997 பெப்ரவரி மாதத்தில், மன்னார் வளைகுடாவில் உள்ள இரணைத்தீவு (Iranativu) அருகே இடம்பெற்றது.


அட்மிரல் சிசில் திஸ்ஸேரா 27 ஜனவரி 1997 அன்று, அட்மிரல் மோகன் சமரசேகராவிடமிருந்த இலங்கை கடற்படையின் தளபதியாக பொறுப்பேற்றார்.


1996 முதல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் தீவிரமடைந்தது. இலங்கை கடற்படை (SLN) தன் வேகத் தாக்குதல் படகுகள் (Fast Attack Craft – FAC) அணியை மிகச் செயல்திறனுடன் பயன்படுத்தியது.

புலிகளின் கடற்கரை போர் திறன்



இந்த FAC அணி கடற்படையின் முன்னணிப் படையாக இருந்து. விடுதலைப் புலிகளின் கடற்கரை போர் திறன்களை அழிப்பதில் முக்கிய பங்கு வகித்தது.

குடும்பிமலையில் மீட்கப்பட்ட கார்ல் குஸ்டாஃப்: கடல் புலிகளின் அபூர்வ கடற்படை ஆயுதம் | The Rare Naval Weapon Of The Sea Tigers



முல்லைத்தீவு, பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை (Velvettithurai) கடற்பகுதிகளில் விடுதலைப் புலிகள் அமைப்பின் கடல் புலி படகுகளுடன் அடிக்கடி மோதல்கள் நடைபெற்றன.



பெரும்பாலான கடற்போர்களில் இலங்கை கடற்படை வெற்றி பெற்றது.

எனினும், சில சம்பவங்களில் இலங்கை கடற்படை தனது சில FAC படகுகளை இழந்தது.



புலனாய்வு அறிக்கைகளில், அலுமினிய உடலமைப்புடைய FAC படகுகளுக்கு எதிராக விடுதலைப் புலிகளின் கடல் புலிகள் புதிய ரீகாய்லெஸ் ரொக்கெட் லோஞ்சர்களை பயன்படுத்துவதாக உறுதிப்படுத்தின.



இவை நெருக்கமான கடற்போரில் மிகப் பேரழிவை ஏற்படுத்தக்கூடியவையாக இருந்தன.

ஆனால் ஆரம்பத்தில் அந்த ஆயுதத்தின் சரியான வகை வெளிப்படுத்தப்படவில்லை.


கீழே குறிப்பிடப்பட்டுள்ள 1997 பெப்ரவரி சம்பவம், பயன்படுத்தப்பட்ட ஆயுதம் 84 மி.மீ. கார்ல் குஸ்டாஃப் ரீகாய்லெஸ் கன் என்பதைக் உறுதிப்படுத்தியது.


திகதி: 9 பெப்ரவரி 1997, காலை 06.00 மணி

இடம்: இரணைத்தீவு அருகே
FAC கள்: – P 460 (இஸ்ரேல் தயாரிப்பு),

கட்டளை: கமாண்டர் மனோஜ் ஜயசூரிய
– P 452 (CDL தயாரிப்பு), தற்காலிக கட்டளை: லெப்டினன்ட் கமாண்டர் பி. எம். விக்ரமசிங்க (நிரந்தர OIC: லெப்டினன்ட் கமாண்டர் என். ஹீனத்திகல)


தளம்: KKS (காங்கேசன்துறை) இலிருந்து செயல்பட்டது.

தாக்குதல் 



இந்த FAC கள், நான்கு 250 HP அவுட்போர்ட் இயந்திரங்கள் கொண்ட விடுதலைப் புலிகளின் தாக்குதல் படகொன்றால் எதிர்கொள்ளப்பட்டன.

குடும்பிமலையில் மீட்கப்பட்ட கார்ல் குஸ்டாஃப்: கடல் புலிகளின் அபூர்வ கடற்படை ஆயுதம் | The Rare Naval Weapon Of The Sea Tigers



அந்த இலக்கு அழிக்கப்பட்டது, மேலும் ஒரு விடுதலைப் புலிகள் உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.

மோதலின் போது, FACயின் மூத்த கடல் இயந்திர தொழில்நுட்ப நிபுணர் (Marine Engineering Mechanic), எதிரி படகு சுட்டு விட்ட ஒரு ப்ராஜெக்டைலை (projectile) எடுத்துக்கொண்டு வந்தார்.


அந்த ப்ராஜெக்டைல் FACயின் உடலை துளைத்து, OICயின் கேபினுக்குள் (இரண்டு படுக்கைகளுக்கு நடுவே) புகுந்து, உதவி இயந்திர அறை (auxiliary engine-room) கதவை மோதி, வெடிக்காமல் தரையில் விழுந்தது.



அந்த கதவு கடுமையாக சேதமடைந்ததால் FACயின் நீர்ப்புகா தன்மை (watertight integrity) பாதிக்கப்பட்டது.

FACகள் மீண்டும் காங்கேசன்துறைக்கு திரும்பியபின், அந்த ப்ராஜெக்டைல் கடற்படை ஆயுத நிபுணர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.



விசாரணைகளில், எதிர் தரப்பு பயன்படுத்திய ஆயுதம் 84 மி.மீ. கார்ல் குஸ்டாஃப் தோளில் ஏந்திச் சுடும் ரீகாய்லெஸ் ஆயுதம் என்றும், அந்த ப்ராஜெக்டைல் ஒரு மில்லியன் மெழுகுவர்த்தி சக்தி கொண்ட ஒளி (illuminator) அளவு என்றும் தெரியவந்தது.

மூன்று ஆயுதங்களின் தொகுதி



ஆனால் தாக்குதல் நடத்தியவர்கள் safety pin-ஐ அகற்றாததால், அந்த ஆயுதம் செயல்படவில்லை.

கார்ல் குஸ்டாஃப் 84 மி.மீ. ரீகாய்லெஸ் ஆயுதம், இதை முதலில் தயாரித்த Carl Gustafs Stads Gevärsfaktori நிறுவனத்தின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது.



இது 1940-களின் இரண்டாம் பாதியில், ஸ்வீடனின் ரோயல் ஸ்வீடிஷ் ஆர்மி மேட்டீரியல் நிர்வாகத்தின் மூலம் உருவாக்கப்பட்டது.


இது ஒரு குழுவால் இயக்கக்கூடிய, எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய காலாட் படை ஆதரவு ஆயுதமாக உருவாக்கப்பட்டு, குறுகிய தூரத்தில் பல்வேறு பயன்பாடுகளுக்கு கவச வாகன எதிர்ப்பு, மனிதவள எதிர்ப்பு, போர்க்கள ஒளியூட்டல், புகை மறைப்பு மற்றும் இலக்கு குறித்தல் போன்றவற்றிற்கு யன்படுத்தப்படுகின்றது.


கடற்படையில் மிகுந்த முன்னேற்றம் பெற்ற SLN FAC களுக்கு எதிராக, நெருக்கமான கடற்போரில் இவ்வாயுதங்களை பயன்படுத்தியது.


விடுதலைப் புலிகளின் கடல் புலி பிரிவின் முக்கியமான புதுமை மற்றும் தந்திரமான மாற்றமாக இது அறியப்பட்டது.


வரலாற்று தகவலின்படி, இறுதி ஈழப்போரின் போது, உலகில் ஒரே ஒரு அரசல்லாத அமைப்பு மட்டுமே இந்த கார்ல் குஸ்டாஃப் தோளில் ஏந்திச் சுடும் ரீகாய்லெஸ் ஆயுதத்தை பயன்படுத்தியது.

அது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு ஆகும்.

இந்நிலையில் சமீபத்தில் மீட்கப்பட்ட இந்த மூன்று ஆயுதங்களின் தொகுதி (batch) எண்களை ஆய்வு செய்வது மிக முக்கியமானது.



அவை எங்கு தயாரிக்கப்பட்டன, எவ்வாறு மட்டக்களப்பு, இலங்கை வரை கொண்டு வரப்பட்டன என்பதைக் கண்டறிவது அவசியம். ” என ரவீந்திர சி. விஜேகுணரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

NIMP 2030 திட்டத்தின் உந்துசக்தியாக TVET: நாட்டின் தொழில்துறை உருமாற்றத்திற்கு மாரா முன்னெடுப்பு! | Makkal Osai

Next Post

Silver | நீங்கள் வாங்கும் வெள்ளி அசலா? போலியா? வீட்டிலேயே ஈஸியா கண்டுபிடிக்கலாம்.. எப்படி தெரியுமா? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Silver | நீங்கள் வாங்கும் வெள்ளி அசலா? போலியா? வீட்டிலேயே ஈஸியா கண்டுபிடிக்கலாம்.. எப்படி தெரியுமா? | வணிகம் போட்டோகேலரி

Silver | நீங்கள் வாங்கும் வெள்ளி அசலா? போலியா? வீட்டிலேயே ஈஸியா கண்டுபிடிக்கலாம்.. எப்படி தெரியுமா? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin