தனது வேலையை விட்டுவிட்டு எளிய வாழ்க்கை விரும்பி குகையில் தஞ்சம் புகுந்துள்ளார் சீனாவை சேர்ந்த ஒருவர்.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது மின் ஹெங்காய் என்பவர் வேலை மற்றும் திருமணம் அர்த்தமற்றதாக கருதி குகையில் தனது தனிமையான வாழ்க்கையை வாழ தொடங்கியுள்ளார்.
டிரைவராக பணியாற்றிய வந்த ஹெங்காய் தனது குடும்ப கடனுக்காக தினமும் 10 மணி நேரம் வேலை செய்துள்ளார். இருப்பினும் அவரால் அதனை நிறைவேற்ற முடியவில்லை.
2021 ஆம் ஆண்டில் நகர வாழ்க்கையிலிருந்து விடுபட நினைத்து தனது மாத சம்பளம், தனது வேலை அனைத்தையும் கைவிட்டுவிட்டு குகையில் தனிமை வாழ்க்கை வாழ முடிவு செய்ததாக சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
தனது சொத்துகளை அவரது உறவினர்கள் விற்றதால் ஏமாற்றமடைந்து வங்கிகளுக்கு கடன்பட்ட பணத்தையும் செலுத்துவதை கைவிட்டுள்ளார்.

