ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை, ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் உள்ள பயனாளியின் வீட்டிற்கே சென்று ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்.
ஆந்திர மாநில சட்டசபை தேர்தலுக்கு முன் சூப்பர் 6 என்ற பெயரில் தெலுங்கு தேசம் கட்சி பல வாக்குறுதிகளை அளித்தது . அதில் ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்குவதும் அடங்கும். இந்நிலையில் இந்த திட்டம் தீபாவளியில் இருந்து தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி 4 மாதங்களுக்கு ஒருமுறை 1 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு பயனாளிகள் முதலில் பணம் செலுத்தி கேஸ் முன்பதிவு செய்ய வேண்டும். கேஸ் சிலிண்டர் வீட்டிற்கு வந்த 48 மணி நேரத்திற்குள் சிலிண்டருக்கான பணம் பயனாளியின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். அவ்வாறு மூன்று இலவச காஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்ய மாநில அரசு ரூ.2,684 கோடி என 5 ஆண்டுகளுக்கு ரூ.13,423 கோடியை ஆந்திர அரசு செலவு செய்ய உள்ளது.
தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி ஆட்சிக்கு வந்த நிலையில் தீபம் 2 என்ற பெயரிடப்பட்ட ஆண்டுக்கு மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டத்தை ஆந்திர மாநில அரசு இன்று மாநிலம் முழுவதும் தொடங்கியுள்ளது. இலவச எரிவாயு சிலிண்டர் திட்ட துவக்கத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள இந்துபுரம் நகருக்கு சென்ற ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அங்கு இலவச எரிவாயு சிலிண்டர் திட்டத்தை துவக்கி வைத்தார்.
இதையும் படிங்க: பயணிகள் கவனத்திற்கு…ரயில்களில் டிக்கெட் முன்பதிவிற்கான விதிகளில் மாற்றம்!
அப்போது பயணாளி வீட்டிற்கு சென்ற சந்திரபாபு நாயுடு டீ போட்டுக்கொடுத்து, வீட்டில் உள்ள அனைவருக்கும் வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
