தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பாஜக ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட், தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநராக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன், தற்போது மகாராஷ்டிர ஆளுநராக பதவி வகித்து வருகிறார்.
இந்த அறிவிப்பின்மூலம், தமிழகத்தைச் சேர்ந்தவரை துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக முன்மொழிந்துள்ளது.

