Last Updated:
இந்திய ராணுவத்தின் Remount Veterinary Corps எனப்படும் மறுசீரமைப்பு மற்றும் கால்நடைப் படைப்பிரிவு 1779-ஆம் ஆண்டு அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் பெங்கால் மாகாணத்தில் ‘Army Veterinary Service’ என்ற பெயரில் தொடங்கப்பட்டது.
குடியரசு தின விழா அணிவகுப்பில், இந்த ஆண்டு முதன்முறையாக பிரத்யேகமாக விலங்குப் படை இடம்பெற்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விலங்குப் படையை கேப்டன் ஹர்ஷிதா ராகவ் வழிநடத்தினார்.
இந்திய ராணுவத்தின் Remount Veterinary Corps எனப்படும் மறுசீரமைப்பு மற்றும் கால்நடைப் படைப்பிரிவு 1779-ஆம் ஆண்டு அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் பெங்கால் மாகாணத்தில் ‘Army Veterinary Service’ என்ற பெயரில் தொடங்கப்பட்டது. ராணுவத்தில் பயன்படுத்தப்படும் குதிரைகள், கோவேறு கழுதைகள் மற்றும் நாய்களுக்குப் பயிற்சி அளிப்பது, அவற்றின் இனத்தைப் பெருக்குவது மற்றும் அவற்றுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதே இந்தப் பிரிவின் முக்கியப் பணியாகும்.
1920-ல் ‘Indian Army Veterinary Corps’ என இது பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இரண்டாம் உலகப்போரின்போது, மியான்மர் போன்ற அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதிகளில் இயந்திரங்கள் செல்ல முடியாத இடங்களுக்கு ராணுவத் தளவாடங்களைச் சுமந்து செல்ல குதிரைகள் மற்றும் கோவேறு கழுதைகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டன. அப்போது இந்த பிரிவின் பணி உலகளவில் கவனிக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில், இந்த ஆண்டு முதன்முறையாக இந்தியாவின் விலங்குப் படை பங்கேற்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விலங்குப் படையை கேப்டன் ஹர்ஷிதா ராகவ் வழிநடத்தினார். RVC பிரிவில் 2023-ல் முதன்முதலாக நியமிக்கப்பட்ட பெண் அதிகாரிகளில் இவரும் ஒருவர். இவர் மும்பை கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயின்ற மருத்துவர் ஆவார்.
அணிவகுப்பில், பாக்ட்ரியன் ஒட்டகங்கள் என அழைக்கப்படும் இரண்டு கூம்புகள் கொண்ட ஒட்டகங்கள் மிடுக்காக அணிவகுத்துச் சென்றன. இந்த ஒட்டகங்கள் லடாக்கின் குளிர்ப் பாலைவனங்களில் 15,000 அடி உயரத்தில் ரோந்துப் பணிக்கு பயன்படுத்தப்படுகின்றன. லடாக்கின் கடுமையான தட்பவெப்ப நிலையில் 60 கிலோ எடையைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட வலிமையான உள்நாட்டு ரக ஜான்ஸ்கர் (Zanskar) குதிரைகளும் பங்கேற்றன.
இயந்திரங்களும், தொழில்நுட்பங்களும் செய்யமுடியாத சில கடினமான எல்லைப் பாதுகாப்புப் பணிகளை இந்த விலங்குகள் செய்து வருகின்றன. இந்தியாவின் பாதுகாப்பு பலம் என்பது வெறும் இயந்திரங்கள் மட்டுமல்ல, Silent Warriors என்று அழைக்கப்படும் விலங்குகளும்தான்.
குடியரசு தினவிழா அணிவகுப்பில் பிரத்யேகமாக இடம்பெற்ற விலங்குப்படை… வழிநடத்திய கேப்டன் ஹர்ஷிதா ராகவ்…


