Last Updated:
குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் ஏன் தேர்வு செய்யப்பட்டார் என அமித்ஷா விளக்கம்.
தமிழ்நாட்டில் தேர்தல் வருவதாலேயே சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவித்ததாகக் கூறப்படுவதில் உண்மையில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தற்போது குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், மகாராஷ்டிரா ஆளுநரும், தமிழருமான சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியாவின் கிழக்குப் பகுதி மாநிலத்தில் இருந்து ஏற்கனவே நாட்டின் குடியரசுத் தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அதேபோல், மேற்கு மற்றும் வடக்கு பகுதியை சேர்ந்த மோடி தற்போது நாட்டின் பிரதமராக உள்ளதாகவும் கூறினார்.
எனவே, தெற்கிலிருந்து வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்ற இயல்பான எண்ணத்தின் அடிப்படையிலே சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார் எனக் கூறினார்.
August 25, 2025 8:09 PM IST
குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் ஏன் தேர்வு செய்யப்பட்டார்…? மத்திய உள்துறை அமைச்சர் பதில்


