• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய பொலிஸ் அதிகாரி கைது

GenevaTimes by GenevaTimes
January 28, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய பொலிஸ் அதிகாரி கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



வரகாபொல, தொலங்கமுவ பகுதியில்  முச்சக்கர வண்டி ஒன்றின் மீது பொலிஸ் கெப் வண்டியால் மோதிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற குற்றத்திற்காக உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்டபோது சந்தேகநபரான உப பொலிஸ் பரிசோதகர் குடிபோதையில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.


கைது செய்யப்பட்ட  நபர் கேகாலை மொலகொட பகுதியைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் ஆவார், இவர் கேகாலை பொலிஸ் தலைமையகத்தில் பணியாற்றி வருகிறார்.


சந்தேகநபர் கேகாலை பொலிஸ் நிலையத்திலிருந்து அம்பேபுஸ்ஸவுக்கு அலுவலக வேலைக்காக கேகாலை பொலிஸுக்கு சொந்தமான கெப் வண்டியில் பயணம் செய்திருந்தார்.


கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கலிகமுவ, கொப்பேவல பகுதியில் இவ்வாறு பயணித்த பொலிஸ் பரிசோதகர் எதிர் திசையில் இருந்து வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


விபத்துக்குப் பிறகு,  உப பொலிஸ் பரிசோதகர் வரகாபொல நோக்கி வண்டியை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றுள்ளார்.


விபத்தில் சிக்கிய நபரும் சம்பவ இடத்தில் இருந்த சிலரும் வரகாபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொலங்கமுவ பகுதி வரை கெப் வண்டியை வண்டியைத் துரத்திச் சென்று பிடித்துள்ளனர்.


பின்னர், வரகாபொல பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வரகாபொல பொலிஸ் அதிகாரிகள், சம்பவத்துடன் தொடர்புடைய உப பொலிஸ் பரிசோதகரை கெப் வண்டியுடன் கைது செய்தனர்.


கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோகதர் பின்னர் வரகாபொல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC)யின் அறிவுறுத்தலின் பேரில் வரகாபொல ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரிடம் முற்படுத்தப்பட்ட போது   அவர் குடிபோதையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.


இதனையடுத்து சந்தேகநபரான உப பொலிஸ் பரிசோதகர் வரகாபொல பொலிஸாரால் கேகாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். R


 



Read More

Previous Post

Kes Teoh Beng Hock, Polis akan panggil semula saksi – Shuhaily | Makkal Osai

Next Post

தில்லி தோ்தல்: முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி வாக்குப்பதிவு!

Next Post
தில்லி தோ்தல்: முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி வாக்குப்பதிவு!

தில்லி தோ்தல்: முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி வாக்குப்பதிவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin