குடிபோதையில் இருந்த வெளிநாட்டு ஊழியர் சுமார் எட்டு கார்களை உலோகக் கம்பியால் அடித்து நொறுக்கிய காரணத்தால் அவருக்கு இரண்டு மாத சிறைத்தண்டனை மற்றும் S$2,000 அபராதம் விதிக்கப்பட்டது.
34 வயதான நுவென் டக் தியென், தனது மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் விரக்தியடைந்து அந்த கார்களை தும்சம் செய்ததாக குறிப்பிடப்படுகிறது.
இதையும் படிங்க: “எங்களுக்கு சம்பளம் வேண்டும்” – போராட்டத்தில் குதித்த வெளிநாட்டு ஊழியர்கள் – சிங்கப்பூரில் பரபர
காக்கி புக்கிட்டில் நிறுத்தப்பட்டிருந்த எட்டு கார்களை உலோகக் கம்பியால் அடித்து நொறுக்கி சுமார் S$23,000 சேதங்களை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
வியட்நாமிய நாட்டவரான அவர், இரண்டு மோசமாக நடந்துகொண்ட குற்றச்சாட்டுகள் மற்றும் கோவிட் -19 விதிகளை மீறிய ஒரு குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும் ஆறு குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்து கொள்ளப்பட்டன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி இரவு 11 மணியளவில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அவரும் ஆறு வியட்நாமிய ஆண்களும் மது அருந்துவதற்காக சந்தித்தனர்.
அப்போது 5 பேர் மட்டுமே ஒன்றுகூட வேண்டும் என்ற நடைமுறையும் இருந்தது.
இதையும் படிங்க: இந்திய ஊழியரை அடித்து தாக்கிய ஓட்டுநர் – “பாதுகாப்பா வாகனம் ஓட்டு பா” என்று சொன்னதற்கு கிடைத்த வெகுமதி