தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் நந்தி கொண்டா நகராட்சி அமைந்துள்ளது. சிறிய ஊரான அங்கு சுமார் 5 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். நந்திகொண்டா நகராட்சிக்கு உட்பட்ட முதலாவது வார்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்ட குடிநீரில் அழுகிய துர்நாற்றம் வீசியது. தண்ணீர் பயன்படுத்த முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அனைவரும் நகராட்சி ஊழியர்களிடம் புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் நகராட்சி ஊழியர்கள் வியாழக்கிழமை மாலை மேல்நிலை நீர் தேக்க தொட்டி மீது ஏறி ஆய்வு செய்துள்ளனர். அப்போது திறந்து கிடந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்குள் 30-க்கும் மேற்பட்ட குரங்குகள் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவற்றின் உடல்கள் அழுகிய நிலையில், தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தன. மேலும் தொட்டியில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது.
ஒரு வாரத்திற்கு முன் தண்ணீர் குறைவாக இருக்கும் போது குடிநீருக்காக தொட்டிக்குள் இறங்கிய குரங்குகள் மேலே வர இயலாமல் இறந்து போயிருக்கலாம் என்று நகராட்சி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இது தெரியாமல் அதே தண்ணீரை கடந்த ஒரு வாரமாக பொதுமக்களுக்கு நகராட்சி ஊழியர்கள் விநியோகித்து வந்தனர். குடிநீர் தொட்டியில் இறந்து கிடந்த குரங்குகளின் உடல்களை அப்புறப்படுத்திய நகராட்சி ஊழியர்கள், தொட்டியை சுத்தப்படுத்தி மீண்டும் தண்ணீரை நிரப்பி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விட்டுள்ளனர்.
Read Also;தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு… தலைமைச் செயலாளர் உத்தரவு!
இந்த நிலையில் குடிநீர் தொட்டியில் குரங்குகள் இறந்து போனது பற்றி நந்திகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குருங்குகள் தாமாக குடிநீர் தொட்டிக்குள் இறங்கி உயிரிழந்தனவா? அல்லது வேறு யாரேனும் கொன்று வீசிச் சென்றார்களா? போன்ற பல்வேறு கோணங்களில் நந்திகொண்டா போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த குடிநீர் தொட்டி மூலம் விநியோகிக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்திய பொதுமக்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று உடல்நிலை பரிசோதனை செய்து கொள்ள நகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
