• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

குஜராத் டைட்டன்ஸுக்கு பதிலடி கொடுக்குமா டெல்லி கேப்பிடல்ஸ்? | IPL 2025, DC vs GT 60th Match Match Preview

GenevaTimes by GenevaTimes
May 18, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
குஜராத் டைட்டன்ஸுக்கு பதிலடி கொடுக்குமா டெல்லி கேப்பிடல்ஸ்? | IPL 2025, DC vs GT 60th Match Match Preview
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் தடுமாறி வரும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, புள்ளிகள் பட்டியலில் வலுவான இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது.

அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 13 புள்ளிகளுடன் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது.

டெல்லி அணி கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களில் 3 தோல்வியை சந்தித்துள்ளது. ஒரு ஆட்டம் மழை காரணமாக ரத்தாகியிருந்தது. கடைசியாக பஞ்சாப் அணியுடன் மோதிய ஆட்டம் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டிருந்தது.

தற்போது தொடர் மீண்டும் தொடங்கிய உள்ள நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளரான ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், இந்தியா திரும்பவில்லை. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை கருத்தில் கொண்டு மிட்செல் ஸ்டார்க் இந்த முடிவை எடுத்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் 14 விக்கெட்கள் வீழ்த்தியுள்ள மிட்செல் ஸ்டார்க் எஞ்சியுள்ள ஆட்டங்களில் விளையாடாதது அந்த அணிக்கு பின்னடைவை கொடுக்கக்கூடும்.

எனினும் அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள அனுபவம் வாய்ந்த முஸ்டாபிஸுர் ரஹ்மான் பலம் சேர்க்கக்கூடும். ஆனால் அவர், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்ற கையோடு இன்றுதான் டெல்லி அணியுடன் இணைகிறார். இனால் இன்றைய ஆட்டத்தில் முஸ்டாபிஸுர் நேரடியாக களமிறங்குவாரா என்பது சந்தேகம்தான். ஒருவேளை அவர், விளையாடும் லெவனில் இடம் பெற்றால் குஜராத் அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கிற்கு நெருக்கடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.

டெல்லி அணி நடப்பு சீசனில் அருண் ஜேட்லி மைதானத்தில் 4 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்வியை பதிவு செய்துள்ளது. வெற்றி பெற்ற இரு ஆட்ங்களில் ஒரு வெற்றி சூப்பர் ஓவர் வாயிலாக கிடைத்ததாகும். இந்த சீசனில் குஜராத், டெல்லி அணிகள் 2-வது முறையாக நேருக்கு நேர் மோதுகின்றன. கடந்த ஏப்ரல் 19-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸிடம் தோல்வி அடைந்திருந்தது.

அந்த ஆட்டத்தில் 203 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் அணி 4 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டிருந்தது. ஜாஸ் பட்லர் 54 பந்துகளில் 97 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்திருந்தார். இந்த தோல்விக்கு இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.

பேட்டிங்கில் டூ பிளெஸ்ஸிஸ், அபிஷேக் போரெல், கருண் நாயர் ஆகியோர் டாப் ஆர்டரிலும் அக்சர் படேல், கே.எல்.ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் நடுவரிசையிலும் அஷுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகாம் ஆகியோர் பின் வரிசையிலும் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் குஜராத் அணிக்கு பதிலடி கொடுத்து வெற்றி பாதைக்கு திரும்ப முயற்சிக்கலாம்.

குஜராத் டைட்டன்ஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 3 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் வலுவான இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டம் உட்பட குஜராத் அணிக்கு 3 ஆட்டங்கள் எஞ்சியுள்ளது. இதில் ஒன்றில் வெற்றி பெற்றாலே அந்த அணி பிளே ஆஃப் சுற்றில் கால்பதித்துவிடும்.

டாப் ஆர்டரில் ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஜாஸ் பட்லர் ஆகியோர் வலுவாக இருப்பது பலம் சேர்க்கிறது. இவர்கள் 3 பேரும் நடப்பு சீசனில் 500 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த திறன் வெளிப்படக்கூடும். அதேவேளையில் பந்துவீச்சில் 20 விக்கெட்கள் வீழ்த்தியுள்ள பிரசித் கிருஷ்ணா, 15 விக்கெட்கள் கைப்பற்றியுள்ள முகமது சிராஜ், 14 விக்கெட்கள் எடுத்துள்ள சாய் சுதர்சன் ஆகியோர் தொடர்ச்சியாக சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்கள் டெல்லி அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும்.



Read More

Previous Post

2 ஆண்களுடன் காதல்..! இடையூறாக இருந்த தாயை கொலை செய்த 13 வயது வளர்ப்பு மகள்

Next Post

நுர் கான் விமானப்படை தளம் மீது இந்தியா தாக்குதல்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் ஒப்புதல் | Indian Missile Hit Nur Khan Base: Shehbaz Sharif

Next Post
நுர் கான் விமானப்படை தளம் மீது இந்தியா தாக்குதல்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் ஒப்புதல் | Indian Missile Hit Nur Khan Base: Shehbaz Sharif

நுர் கான் விமானப்படை தளம் மீது இந்தியா தாக்குதல்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் ஒப்புதல் | Indian Missile Hit Nur Khan Base: Shehbaz Sharif

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin