• Login
Friday, October 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

குஜராத்தில் பொது சிவில் சட்டம் அமல்.. ஜனாதிபதி முர்மு ஒப்புதல்.. இந்தியாவின் 2வது மாநிலம் இதுதான் | President Droupadi Murmu gives nod for Uniform Civil Code in Gujarat

GenevaTimes by GenevaTimes
October 2, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
குஜராத்தில் பொது சிவில் சட்டம் அமல்.. ஜனாதிபதி முர்மு ஒப்புதல்.. இந்தியாவின் 2வது மாநிலம் இதுதான் | President Droupadi Murmu gives nod for Uniform Civil Code in Gujarat
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


India

oi-Nantha Kumar R

Time
Updated: Friday, October 2, 2026, 21:52 [IST]

காந்தி நகர்: இந்தியாவில் 2வது மாநிலமாக குஜராத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று அனுமதி வழங்கி உள்ளார். இதன்மூலம் பாஜக ஆளும் உத்தரகாண்ட்டை தொடர்ந்து குஜராத்தில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வருகிறது.

President Droupadi Murmu

குஜராத்தில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக பூபேந்திர படேல் செயல்பட்டு வருகிறார். இங்கு பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் பாஜக அரசு தீவிரம் காட்டி வந்தது.

கடந்த மார்ச் மாதம் பொது சிவில் சட்டத்துக்கான மசோதா குஜராத் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. மொத்தம் ஏழரை மணிநேரம் அந்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து இந்த மசோதாவிற்கு ஒப்புதல் கோரி ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று ஜனாதிபதி திரெளபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார். இதன்மூலம் குஜராத்தில் பொது சிவில் சட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. பொது விசில் சட்டத்துக்கான விதிமுறைகளை விரைவில் குஜராத் அரசஅ அறிவிக்க உள்ளது. அதன்பிறகு இந்த சட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.

இந்த பொது சிவில் சட்டத்தை இஸ்லாமியர்கள் எதிர்த்து வருகின்றனர். இந்த சட்டம் அமலுக்கு வந்தால் திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் உரிமை என அனைத்திற்கும் ஒரே மாதிரியான நடைமுறை பின்பற்றப்படும். தற்போது இருப்பது போல் மதத்துக்கு ஏற்றாற்போல் பின்பற்றப்படாது. இதனால் தான் இஸ்லாமியர்கள் எதிர்த்து வருகின்றனர். ஏனென்றால் இஸ்லாமியர்கள் இந்த விவகாரங்களில் இஸ்லாமிய மதச் சட்டமான ‘ஷரியத்’தை பின்பற்றி வரும் நிலையில் அதில் மாநில அரசு தடையீடு செய்வதாக குற்றம்சாட்டி வரும் நிலையில் குஜராத்தில் அமலுக்கு வர உள்ளது.

இதுபற்றி முதல்வர் பூபேந்திர படேல் கூறுகையில், ”பொது சிவில் சட்டம் அனைவருக்கும் ஒரே மாதிரியான உரிமைகளை வழங்கும். இந்த சட்டம் மாநிலத்தில் உள்ள சகோதரிகள் மற்றும் மகள்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் மூலமாக 2047 ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் வேகத்தை அதிகரிக்க இந்த பொது சிவில் சட்டம் உதமும். இந்த மசோதா யாருக்கும் பாகுபாடு காட்டாது. அனைவருக்கும் பொதுவான சட்டத்தை வழங்கும். ” என்று கூறியுள்ளார்.

குஜராத் என்பது பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமாகும். நம் நாட்டில் முதல் முதலாக பாஜக ஆளும் உத்தரகாண்ட்டில் பொது சிவில் சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு 2வது மாநிலமாக குஜராத்தில் பொது சிவில் சட்டம் அமலாக உள்ளது. அதேபோல் குஜராத்தில் உள்ள காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர் இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த பொது சிவில் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது. இதனை குஜராத்தில் அமல்படுத்தக்கூடாது என்று கூறி வருகின்றனர். இதனால் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்தபோதே காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary

Uniform Civil Code in Gujarat: President Droupadi Murmu has granted approval today for the implementation of the Uniform Civil Code in Gujarat, making it the second state in India to do so. With this, the Uniform Civil Code comes into effect in Gujarat, following its implementation in BJP-ruled Uttarakhand.

Read More

Previous Post

போர்க்களத்தில் முதன்முறையாகப் சொந்த பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்திய உக்ரைன்

Next Post

Post Office | போஸ்ட் ஆபிஸ் 5 ஆண்டு TD திட்டத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு பணம் கிடைக்கும்? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Post Office | போஸ்ட் ஆபிஸ் 5 ஆண்டு TD திட்டத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு பணம் கிடைக்கும்? | வணிகம் போட்டோகேலரி

Post Office | போஸ்ட் ஆபிஸ் 5 ஆண்டு TD திட்டத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு பணம் கிடைக்கும்? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin