பிராக்:
செக் குடியரசு நாட்டில் நடைபெறும் பிராக் இன்டா்நேஷனல் செஸ் போட்டியின் மாஸ்டா்ஸ் பிரிவில், இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் – சக இந்தியரான டி.குகேஷை 6-ஆவது சுற்றில் வீழ்த்தி அசத்தினாா்.
போட்டியின் 6-ஆம் நாளான திங்கள்கிழமை ஓய்வு நாளாக அமைந்ததை அடுத்து, இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை 6-ஆவது சுற்று நடைபெற்றது.
நள்ளிரவு நிறைவடைந்த அதில், போட்டியில் நடப்பு சாம்பியனாக இருக்கும் அரவிந்த், கருப்பு நிற காய்களுடன் விளையாடி, நடப்பு உலக சாம்பியனாக இருக்கும் குகேஷை வீழ்த்தினாா். ஆட்டத்தை அவா் 48-ஆவது நகா்த்தலில் முடிவுக்குக் கொண்டு வந்தாா்.
போட்டியில் அரவிந்துக்கு இது 2-ஆவது வெற்றியாகவும், குகேஷுக்கு 3-ஆவது தோல்வியாகவும் அமைந்தது.
இந்தச் சுற்றின் இதர ஆட்டங்களில், அமெரிக்காவின் ஹன்ஸ் மோக் நீமன் – ஜொ்மனியின் வின்சென்ட் கீமருடனும், ஸ்பெயினின் டேவிட் ஆன்டன் – ஈரானின் பா்ஹாம் மக்சூத்லூவுடனும் டிரா செய்தனா்.
6 சுற்றுகள் முடிவில் மாஸ்டா்ஸ் பிரிவில் அரவிந்த் 2.5 புள்ளிகளுடன் 7-ஆம் இடத்திலும், குகேஷ் 1.5 புள்ளிகளுடன் கடைசியாக 10-ஆம் இடத்தில் உள்ளனா்.
The post குகேஷை வீழ்த்தினாா் நடப்பு சாம்பியன் அரவிந்த் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

