Last Updated:
பல ஆண்டுகளாக அமெரிக்கா டென்மார்க்குக்கு கொடுத்தவற்றுடன் ஒப்பிடும்போது, இது ஒரு சிறிய கோரிக்கைதான் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
கிரீன்லாந்தை கைப்பற்ற ராணுவ பலத்தை பயன்படுத்த மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்ற நேட்டோ அமைப்பு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால், கிரீன்லாந்து மீது அமெரிக்கா போர் தொடுக்கலாம் என்று அச்சம் நிலவி வந்தது.
இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் உலகத் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய அதிபர் டிரம்ப், அமெரிக்காவைத் தவிர வேறு யாராலும் கிரீன்லாந்தை பாதுகாக்க முடியாது என்றார். இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி படையிடம் வெறும் 6 மணி நேரத்தில் டென்மார்க் வீழ்ந்துவிட்டதாகவும், அப்போது கிரீன்லாந்தை மீட்டு டென்மார்க்கிடம் திருப்பி அளித்ததில் அமெரிக்கா தவறு செய்துவிட்டதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
குளிரான மற்றும் ஒரு பனித்துண்டு போன்ற பிரதேசத்தை தான் அமெரிக்கா கேட்பதாகவும், பல ஆண்டுகளாக அமெரிக்கா டென்மார்க்குக்கு கொடுத்தவற்றுடன் ஒப்பிடும்போது, இது ஒரு சிறிய கோரிக்கைதான் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
இதற்கிடையே, நெருக்கடி நிலையை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்கும்படி கிரீன்லாந்து அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதைத்தொடர்ந்து அந்நகர மக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவித்து வருகின்றனர்.


