21
இளைஞர் விவகார விளையாட்டுத்துறை மற்றும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் அனுசரணையுடன் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கிழக்கு மாகாண இளைஞர்களுக்கிடையிலான விருதுப் போட்டிகள் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை நடராஜானந்தா மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர் கழகங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 193 போட்டியாளர்கள் 33 நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.
நடனம், நாட்டியம், அறிவிப்பாளர், நாடகம், பேச்சு, வில்லுப்பாட்டு ,பாடல்,அபிநயம், நாட்டார் பாடல்கள், கூத்து உட்பட 33 நிகழ்ச்சிகளில் இளைஞர் யுவதிகள் பங்கெடுத்திருந்தனர். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் திருமதி நிஷாந்தி அருள்மொழி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பிரதிப் பணிப்பாளர் ஜெகத் லியனகே பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
(மட்டக்களப்பு குறூப் நிருபர்)

