• Login
Tuesday, September 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

கிள்ளான், கோலா சிலாங்கூரில் காவல்துறையின் அதிரடி சோதனை: 262 மோட்டார் சைக்கிள்கள் பரிசோதனை; 155 பேருக்கு சம்மன்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 1, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
கிள்ளான், கோலா சிலாங்கூரில் காவல்துறையின் அதிரடி சோதனை: 262 மோட்டார் சைக்கிள்கள் பரிசோதனை; 155 பேருக்கு சம்மன்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

கோலா சிலாங்கூர் மற்றும் கிள்ளான் பகுதிகளில் நேற்று மேற்கொள்ளப்பட்ட ‘ஓப் சம்சங் ஜாலானான்’ மற்றும் ‘ஒப் பெர்செபாடு அம்பாங் மெர்டேகா’ ஆகிய இரு வேறு சோதனைகளில் மொத்தம் 262 மோட்டார் சைக்கிள்கள் பரிசோதிக்கப்பட்டு, பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக 155 சம்மன்கள் வழங்கப்பட்டன.

கோலா சிலாங்கூர் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் அஜஹாருடின் தாஜூடின் கூறுகையில், மாலை 4 மணியளவில் தொடங்கி சுமார் 7 மணி நேரம் நீடித்த இச்சோதனை நடவடிக்கை முக்கியமாக ‘பன்தாய் ரெமிஸ்’, ஜெரம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. மோட்டார் சைக்கிள் சாகசங்களில் ஈடுபடுவதற்கும், மாற்றி அமைக்கப்பட்ட புகை போக்கி குழாய்கள் கொண்ட மோட்டார் சைக்கிள்களில் இளைஞர்கள் ஒன்று கூடுவதாகவும் கிடைத்த தகவலின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த 7 மணி நேர சோதனையில், 140 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டன, 90 சம்மன்கள் விநியோகிக்கப்பட்டன மற்றும் 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் சொன்னார்.

ஓட்டுநர் உரிமம் இல்லாதது, காப்பீடு இல்லாதது, சாலை வரி (Road tax) மற்றும் பதிவு எண் இல்லாதது, பக்கவாட்டுக் கண்ணாடிகள் (Rearview mirror) இல்லாதது, தலைக்கவசம் அணியாதது, புகைப்போக்கியை மாற்றி அமைத்தது மற்றும் ‘L’, ‘P’ ஸ்டிக்கர்களை ஒட்டாதது போன்ற குற்றங்களுக்காக இந்தச் சம்மன்கள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மற்றொரு சம்பவத்தில், கிள்ளான் பெர்சியாரான் ராஜா மூடா மூசாவில் நடைபெற்ற சோதனையில் 122 மோட்டார் சைக்கிள்கள் சோதனையிடப்பட்டு, 65 சம்மன்கள் விநியோகிக்கப்பட்டதாக கிள்ளான் தெற்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் (ACP) லிம் ஜிட் ஹுய் தெரிவித்தார்.

இரவு 12.01 மணிக்குத் தொடங்கிய இச்சோதனையில், 21 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதில் 2 நபர்கள் மதுபானம் அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக (Section 45A(1) Road Transport Act 1987) கைது செய்யப்பட்டனர்.

ஓட்டுநர் உரிமம் இல்லாதது, காலாவதியான சாலை வரி, வாகனக் கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் பதிவு எண் விதிமீறல்கள் போன்றவை இங்கு பதிவு செய்யப்பட்டன.

தேசிய தினக் கொண்டாட்டங்களின் போது பொதுமக்களின் பாதுகாப்பையும் போக்குவரத்து சீரமைப்பையும் உறுதி செய்யும் வகையில் அதிகாலை 6.30 மணி வரை இச்சோதனை நடவடிக்கை தொடர்ந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.



Read More

Previous Post

உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியா தயார்: ரஷ்ய அதிபர் புடினிடம் பிரதமர் மோடி உறுதி! | World News (உலக செய்திகள்)

Next Post

புதுடில்லி முன்னெடுப்பில் இலங்கையில் பிம்ஸ்டெக் தொழில்நுட்பப் பரிமாற்ற வசதி

Next Post
புதுடில்லி முன்னெடுப்பில் இலங்கையில் பிம்ஸ்டெக் தொழில்நுட்பப் பரிமாற்ற வசதி

புதுடில்லி முன்னெடுப்பில் இலங்கையில் பிம்ஸ்டெக் தொழில்நுட்பப் பரிமாற்ற வசதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin