Courtesy: siva
கிளிநொச்சி பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு
விளைவிக்கும் வகையில், அதிவேகமாகப் பயணிக்கும் மோட்டார் சைக்கிள்களை
கட்டுப்படுத்தும் நோக்கில் போக்குவரத்து காவல்துறையினரின் விசேட அதிரடி வீதி சோதனை
நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
வீதி விபத்துக்களை தடுப்பதையும், பாதசாரிகள் மற்றும் ஏனைய வாகன சாரதிகளின்
பாதுகாப்பை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு நேற்றும் இன்றும் (23, 24
ஜூன்) இந்த அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன.
பல்வேறு போக்குவரத்து விதிமீறல்
இவ்வீதி சோதனையின் போது, பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 12
அதிவேக சொகுசு மோட்டார் சைக்கிள்கள் காவல்துறையினரால் சட்ட நடவடிக்கைக்கு
உட்படுத்தப்பட்டுள்ளன.

வீதியில் செல்லும்
பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில், வாகன இலக்கத் தகடுகள் (Number
Plates) எதுவும் பொருத்தப்படாமல் இயக்கப்பபட்டமை
மோட்டார் சைக்கிள்களுக்கு
உரிய முறையான சட்டபூர்வ ஆவணங்கள் (Documents) இன்றிச் செலுத்தப்பட்டமை தகுந்த சாரதி அனுமதிப் பத்திரம் (Driving License)
இல்லாத நபர்களால் இவை ஓட்டி வரப்பட்டமை
ஆகிய காரணங்களால் இந்த மோட்டார் சைக்கிள்கள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும்
பொதுமக்களின்
பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், போக்குவரத்து விதிகளுக்கு
முரணாகவும் செயற்படும் வாகன சாரதிகளுக்கு எதிராக இனிவரும் நாட்களிலும் இத்தகைய
கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என கிளிநொச்சி போக்குவரத்து காவல்துறையினர்
தெரிவித்துள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

