கிளாஸ் 3 (Class 3) மற்றும் 3A ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் இனி கனரக மின்சார வாகனங்களை ஓட்ட அனுமதி வழங்கப்படவுள்ளது.
இதன் மூலம், கனரக மின்சாரச் சரக்கு வாகனங்கள் (LGV) மற்றும் மின்சாரச் சிறிய பேருந்துகளை விரைவில் அவர்கள் ஓட்ட முடியும் என்று போக்குவரத்து காவல்துறை நேற்று (டிசம்பர் 12) அறிவித்தது.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் 4 நாள் அதிரடி சோதனை: 7 வெளிநாட்டு ஊழியர்கள் கைது!
2040 ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூர் முழுமையாக பசுமை எரிசக்தி வாகனங்களுக்கு மாறுவதற்கான நோக்கமே இந்த நடவடிக்கை என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய விதிமுறைகளின்படி, கிளாஸ் 3 மற்றும் 3A உரிமம் வைத்திருக்கும் ஓட்டுநர்கள் 2,500 கிலோ வரை எடை கொண்ட இலகுரக சரக்கு வாகனங்கள் மற்றும் சிறிய பேருந்துகளை மட்டுமே ஓட்ட முடியும்.
2,500 கிலோ எடைக்கு மேற்பட்ட வாகனங்கள் ஓட்டுவதற்கு கிளாஸ் 4 அல்லது கிளாஸ் 4P ஓட்டுநர் உரிமம் தேவைப்படும்.
டிச.15 முதல், கிளாஸ் 3 மற்றும் கிளாஸ் 3A ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் 2,501 கிலோ முதல் 3,000 கிலோ வரை எடைகொண்ட 4 வகையான மின்சார LGV வாகனங்கள் மற்றும் மின்சார சிறிய பேருந்துகளை ஓட்ட அனுமதிக்கப்படுவார்கள்.
உட்லண்ட்ஸ் தங்கும் விடுதியில் பிடிபட்ட 12 வெளிநாட்டு ஊழியர்கள்: எதற்காக கைது? – அதிகாரிகள் விளக்கம்

