• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

‘கிரேட்டா தன்பர்க் கோப மேலாண்மை வகுப்புக்குச் செல்ல வேண்டும்’ – ட்ரம்ப் அறிவுரை | Greta Thunberg should take anger management classes Donald Trump advises

GenevaTimes by GenevaTimes
June 10, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
‘கிரேட்டா தன்பர்க் கோப மேலாண்மை வகுப்புக்குச் செல்ல வேண்டும்’ – ட்ரம்ப் அறிவுரை | Greta Thunberg should take anger management classes Donald Trump advises
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நியூயார்க்: இஸ்ரேல் ராணுவத்தால் கடத்தப்பட்டதாக கிரேட்டா தன்பர்க் குற்றஞ்சாட்டிய நிலையில், ‘தன்பர்க் கோப மேலாண்மை வகுப்புகளுக்கு செல்ல வேண்டும்’ என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவுரை வழங்கியுள்ளார்.

காசாவை நோக்கி நிவாரண கப்பலில் சென்ற தனது குழுவினருடன் கடத்தப்பட்டதாக சமூக செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் நேற்று சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டார். இதனை இஸ்ரேல் உடனடியாக மறுத்தது.

நேற்று (திங்கள்கிழமை) அதிகாலை காசாவை நோக்கிச் சென்றபோது, ​​மேட்லீன் நிவாரணக் கப்பலை இஸ்ரேலியப் படைகள் இடைமறித்தன. அது தொடர்பாக வீடியோ ஒன்றில் பேசிய கிரேட்டா தன்பர்க், “இந்த வீடியோவை நீங்கள் பார்த்தால், நாங்கள் சர்வதேச நீரில் தடுத்து நிறுத்தப்பட்டு கடத்தப்பட்டுள்ளோம். என்னையும் மற்றவர்களையும் விரைவில் விடுவிக்க அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இருப்பினும், சில மணிநேரங்களுக்குப் பிறகு, இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் எக்ஸ் சமூக வலைதளத்தில் கிரேட்டா தன்பர்க்கின் புகைப்படத்தைப் பகிர்ந்து, “கிரேட்டா தன்பர்க் தற்போது இஸ்ரேல் வழியாக பாதுகாப்பாக சென்று கொண்டிருக்கிறார்” என்று கூறியது. மேட்லீன் கப்பலில் குழந்தைகளுக்கான பால்பவுடர், மாவு, அரிசி, டயப்பர்கள், பெண்கள் சுகாதாரப் பொருட்கள் மற்றும் பல வகையான பொருட்கள் எடுத்துச்செல்லப்பட்டன.

இந்த நிலையில் தன்பெர்க் கடத்தப்பட்டதாகக் கூறப்படுவது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், “அவர் ஒரு விசித்திரமான நபர். அவர் ஒரு இளம், கோபக்காரர். அது உண்மையான கோபமா என்று எனக்குத் தெரியவில்லை; நம்புவது கடினம். அவர் நிச்சயமாக வித்தியாசமானவர். அவர் கோப மேலாண்மை வகுப்பிற்குச் செல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதுதான் அவருக்கு எனது முதன்மை பரிந்துரை. கிரேட்டா தன்பர்க்கை கடத்தாமலேயே இஸ்ரேல் போதுமான சிக்கல்களைக் எதிர்கொண்டுள்ளது என்று நான் நினைக்கிறேன்.” என்று கூறினார்



Read More

Previous Post

ரெப்போ வட்டி குறைப்பு எதிரொலி..! கடனுக்கான வட்டியை குறைக்கும் வங்கிகள்

Next Post

பேருந்து விபத்தில் மாணவர்கள் இறந்ததைத் தொடர்ந்து சட்டக் கட்டமைப்பில் சீர்திருத்தங்கள் – Malaysiakini

Next Post
பேருந்து விபத்தில் மாணவர்கள் இறந்ததைத் தொடர்ந்து சட்டக் கட்டமைப்பில் சீர்திருத்தங்கள் – Malaysiakini

பேருந்து விபத்தில் மாணவர்கள் இறந்ததைத் தொடர்ந்து சட்டக் கட்டமைப்பில் சீர்திருத்தங்கள் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin