முக்கியமான ஒன்றாக இருந்த போதிலும், இது எப்படி இயங்குகிறது என்பது சம்பந்தமான தவறான புரிதல்கள் மக்களிடையே தொடர்ந்து இருந்து வருகிறது. கடன் பெறுநர்கள் மட்டுமல்லாமல், வங்கியில் வேலை செய்பவர்கள் கூட சில சமயங்களில் இந்த கட்டு கதைகளை நம்புகின்றனர். எனவே கிரெடிட் ஸ்கோர் பற்றி இந்தியாவில் நிலவை வரும் சில பொதுவான கட்டுக்கதைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒரு கிரெடிட் ஸ்கோர் என்ற மூன்று இலக்க எண்ணானது ஒரு நபரை நம்பி கடன் கொடுக்கலாமா வேண்டாமா என்பதை வெளிப்படுத்தும் ஒரு மதிப்பீடு ஆகும். இது உங்களுடைய கடனை திருப்பி செலுத்தும் வரலாறு, நீங்கள் எடுத்திருக்கும் கடன்களின் வகைகள் மற்றும் இதுவரை நீங்கள் எவ்வளவு கடனை பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்பது போன்ற காரணிகளின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
பொதுவாக கிரெடிட் ஸ்கோர் என்பது 300 முதல் 900 வரை வழங்கப்படுகிறது. இதில் 300 முதல் 579 என்பது மோசமான கிரெடிட் ஸ்கோர் ஆகவும், 580 முதல் 669 வரை ஓரளவு நல்ல ஸ்கோராகவும், 670 முதல் 749 வரை நல்ல கிரெடிட் ஸ்கோர் ஆகவும், 750 முதல் 900 வரை சிறந்த கிரெடிட் ஸ்கோர் ஆகவும் கருதப்படுகிறது. எனினும் இந்த வரம்புகள் என்பது பல்வேறு கிரெடிட் பியூரியாக்களை பொருத்து மாறுபடலாம். இப்பொழுது கிரெடிட் ஸ்கோர் பற்றிய பொதுவான சில கட்டுக் கதைகளை பார்ப்போம்.
நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்பது எப்பொழுதுமே உங்களுடைய கிரெடிட் ஸ்கோரில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது. உங்களுடைய கடனை நீங்கள் எப்படி நிர்வகிக்கிறீர்கள், சரியான நேரத்தில் திருப்பி செலுத்துகிறீர்களா, உங்களுக்கு வழங்கப்பட்ட உச்சவரம்பை விட அதிகமாக பயன்படுத்துகிறீர்களா, அதிக அளவு கடன் அல்லது கிரெடிட் கார்டுகளை ஒரு குறுகிய நேரத்திற்குள் வாங்குவதை தவிர்க்கிறீர்களா என்பதை பொறுத்து அமைகிறது.
இது பெரும்பாலானவர்கள் நம்பக்கூடிய ஒரு பொதுவான கட்டுக்கதை ஆகும். நீங்களே உங்களுடைய கிரிடிட் ஸ்கோரை சரி பார்ப்பது என்பது ‘சாஃப்ட் என்கொயரி’ என்று அழைக்கப்படுகிறது. இதனால் உங்களுடைய ஸ்கோரில் எந்தவிதமான தாக்கமும் ஏற்படாது. சொல்லப்போனால், வழக்கமான முறையில் உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை சரி பார்ப்பதன் மூலமாக அதில் இருக்கக்கூடிய பிழைகளை உங்களால் கண்டுபிடித்து, ஆரோக்கியமான கிரெடிட் ஸ்கோரை பராமரிக்க முடியும்.
எந்த கடனும் இல்லை, எந்த கிரெடிட் கார்டும் இல்லை- எந்த பிரச்சனையும் இல்லை. சரிதானே? அப்படி கிடையாது. இதுவரை நீங்கள் கடனே வாங்கியதில்லை என்றால் உங்களிடம் மிகக் குறைந்த அல்லது எந்த விதமான கடன் வரலாறுமே இருக்காது. இதனால் ஒரு கடனை நீங்கள் எப்படி கையாளுவீர்கள் என்பதற்கான நிரூபணம் கடன் வழங்குனர்களுக்கு கிடைக்காது. இதனால் உங்களுக்கு கடன் அங்கீகரிக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
எல்லாவிதமான கிரெடிட் ஸ்கோர் மற்றும் பியூரியாக்களும் ஒன்றுதான்: இந்தியாவில் CIBIL, Experian, CRIF High Mark மற்றும் Equifax போன்ற பல்வேறு உரிமம் பெற்ற கிரெடிட் பியூரியாக்கள் உள்ளன. அவை கிரெடிட் ஸ்கோரை கணக்கிடுவதற்கு தனித்துவமான முறைகளை பின்பற்றுகின்றனர். இதனால் ஒவ்வொரு பியூரியா வழங்கும் கிரெடிட் ஸ்கோர் என்பது சற்று வித்தியாசமானது. எனவே இவை அனைத்தையும் கண்காணிப்பது புத்திசாலித்தனமாக அமையும்.
ஒரு கிரெடிட் கார்டை மூடிவிட்டால் உங்களுடைய பழைய கடன் வரலாறு அழிக்கப்பட்டுவிடும்: உங்களுடைய கிரெடிட் கார்டு அக்கவுண்ட்டை மூடிவிட்டால் நீங்கள் செய்த பழைய தவறுகளை அழித்துவிடலாம் என்று அர்த்தம் கிடையாது. உங்களுடைய கடனை திருப்பி செலுத்துவதற்கான வரலாறு தொடர்ந்து பல வருடங்களுக்கு உங்களுடைய கிரெடிட் ரிப்போர்ட்டில் அப்படியே இருக்கும். அது நல்லதாக இருந்தாலும், சரி கெட்டதாக இருந்தாலும் சரி. எனவே ஒரு முறை நீங்கள் EMI செலுத்த தவறியிருந்தாலோ அல்லது தாமதமாக EMI செலுத்தி இருந்தாலோ அது நீங்கள் அக்கவுண்ட்டை மூடிய பிறகும் கூட தொடர்ந்து பதிவு செய்யப்பட்டிருக்கும்.
August 31, 2025 4:43 PM IST

