Last Updated:
எப்போதுமே இலவசமாக கிடைக்கும் கிரெடிட் ரிப்போர்ட் சரிபார்ப்பு செயல்முறையை பயன்படுத்தி உங்களுடைய கிரெடிட் சம்பந்தப்பட்ட தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியாவில் உள்ள பலருக்கு கிரெடிட் ஸ்கோர் என்பது 620க்கும் குறைவானதாக உள்ளது. இது பொருளாதார நிறுவனங்களால் ‘குறைவான கிரெடிட் ஸ்கோர்’ என்று லேபிளிடப்பட்ட ஒரு மதிப்பெண் ஆகும். இந்த கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பவர்களுக்கும் கடன் அங்கீகரிக்கப்படும் என்றாலும் கூட, இவர்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும். இது தவிர தேவையில்லாத தாமதங்கள், வீண் கேள்விகள் மற்றும் குறைவான ஆப்ஷன்கள் மட்டுமே கிடைக்கும்.
551 மற்றும் 620க்கு இடைப்பட்ட கிரெடிட் ஸ்கோர் என்பது குறைவானது. அதாவது இந்த ஸ்கோர் கொண்டவர்களுக்கு அடமானம் இல்லாமல் வழங்கப்படும் பர்சனல் லோன்கள் அதிக வட்டி விகிதங்களில் வழங்கப்படலாம் அல்லது சில சமயங்களில் உங்களுடைய லோன் அப்ளிகேஷன் நிராகரிக்கப்படுவதற்குக் கூட வாய்ப்புள்ளது. ஆகையால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை அதிகப்படுத்துவதற்கு உதவும் ஒரு சில யுக்திகளை இப்போது பார்க்கலாம்.
உங்களுடைய பேமெண்ட் வரலாறு என்பது உங்களது கிரெடிட் ஸ்கோரில் மிகப்பெரிய தாக்கத்தை கொண்டுள்ளது. தொடர்ச்சியாக நீங்கள் EMIகள் மற்றும் கிரெடிட் கார்டு பில்களை சரியான நேரத்தில் செலுத்தி வந்தால் நிச்சயமாக உங்களுடைய கிரெடிட் ஸ்கோரில் பாசிட்டிவான தாக்கம் ஏற்படும். சிறிய அளவில் நீங்கள் செய்யும் தாமதம் கூட உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை எதிர்மறையாக பாதிக்கலாம்.
உங்களுடைய கடன் பயனீட்டு விகிதம் 30 சதவீதத்திற்கும் குறைவாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கிரெடிட் கார்டின் லிமிட் ஒரு லட்சம் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் இந்த கார்டை பயன்படுத்தி நீங்கள் 30,000 ரூபாய்க்கும் குறைவான தொகையை மட்டுமே செலவு செய்ய வேண்டும். இதன் மூலமாக உங்களுடைய கிரெடிட் பயனீட்டு விகிதம் என்பது 30 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும். மேலும் ஒரு குறுகிய காலத்திற்குள் பல்வேறு கடன்கள் அல்லது கிரெடிட் கார்டுகளை வாங்க வேண்டாம். இதனால் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் செய்யும் ஹார்ட் என்குயரி உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும்.
எப்போதுமே இலவசமாக கிடைக்கும் கிரெடிட் ரிப்போர்ட் சரிபார்ப்பு செயல்முறையை பயன்படுத்தி உங்களுடைய கிரெடிட் சம்பந்தப்பட்ட தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள். அதில் ஏதேனும் தவறுகள் இருக்கும் பட்சத்தில் தகுந்த முறையில் புகாரிட்டு அதற்கான தீர்வுகளை நீங்கள் பெறலாம்.
*எப்போதும் டியூ தொகையை சரியான நேரத்தில் செலுத்தவும். ஆட்டோ டெபிட் ஆப்ஷனை எனேபிள் செய்துக்கொள்ளுங்கள்.
*கிரெடிட் பயனீட்டு விகிதம் 30 சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
*ஒரே கார்டு பயன்படுத்தி அனைத்து பேமெண்ட்களையும் செய்யாமல் பல்வேறு கார்டுகளை உபயோகிப்பது பயனீட்டு விகிதத்தை குறைக்க உதவும்.
*வழக்கமான முறையில் கிரெடிட் ரிப்போர்ட்டை கண்காணிக்கவும்.
*பழைய கிரெடிட் அக்கவுண்டுகளை மூட வேண்டாம். ஏனெனில் நீளமான கிரெடிட் வரலாறு என்பது வலுவான ஸ்கோரை பெறுவதற்கு உதவும்.
இந்த படிகளை பின்பற்றினால் 620 என்ற ஸ்கோரில் இருந்து 650 முதல் 700 வரையிலான மதிப்பெண் பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இதன் மூலமாக உங்களுக்கு சிறந்த கடன் ஆப்ஷன்கள் மற்றும் பிரீமியம் கிரெடிட் கார்டுகள் மற்றும் வட்டி விகிதங்கள் கிடைக்கலாம்.
June 30, 2025 11:21 AM IST