பொதுவாக கடன் வாங்கும் பொழுது உங்களுடைய வருமானம், ஏற்கனவே நீங்கள் வைத்திருக்க கூடிய கடன்கள், கிரெடிட் ஸ்கோர் போன்ற பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்ட பின்னரே கடன் வழங்குனர்கள் உங்களுக்கான லோனை அப்ரூவ் செய்வார்கள். இதில் கிரெடிட் ஸ்கோர் முக்கியமான பங்கு வகிக்கிறது. கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும் பல்வேறு காரணிகள் உள்ளன. அந்த காரணிகள் கிரெடிட் ஸ்கோரில் நேர்மறையான தாக்கத்தையோ அல்லது எதிர்மறையான தாக்கத்தையோ ஏற்படுத்தலாம். அந்த வகையில் கிரெடிட் மிக்ஸ் கிரெடிட் ஸ்கோரை எவ்வாறு பாதிக்கிறது என்பதை இந்த பதிவின் மூலமாக விளக்கமாக தெரிந்து கொள்ளலாம்.
பல்வேறு வகையான கிரெடிட்களை வைத்திருப்பது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். பல்வேறு வகையான கடன் பொறுப்புகளை உங்களால் சமாளிக்க முடியும் என்பதை இதன் மூலமாக கடன் வழங்குனர்கள் புரிந்து கொள்வார்கள்.
உங்களுடைய கிரெடிட் ரிப்போர்ட்டில் நீங்கள் வைத்திருக்கக்கூடிய பல்வேறு வகையான கிரெடிட் அக்கவுண்டுகள் கிரெடிட் மிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இதில் கார் லோன்கள், கிரெடிட் கார்டுகள், கல்வி கடன்கள், பர்சனல் லோன்கள் மற்றும் பல அடங்கும்.
கிரெடிட் மிக்ஸ் என்பது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை பாதிக்கக்கூடிய காரணிகளில் ஒன்று. எனினும் கிரெடிட் பயன்பாடு மற்றும் பேமெண்ட் வரலாறை போல இது முக்கியமான ஒன்றாக இல்லாமல் போகலாம்.
எனினும் உங்களுடைய கிரெடிட் மிக்ஸை மேம்படுத்துவதற்காக நீங்கள் மேற்கொண்டு புதிய கிரெடிட்களை எடுக்கக்கூடாது. புது அக்கவுன்டைகளை திறப்பது தற்போதைய சூழ்நிலையில் விசாரணைகள் மற்றும் அக்கவுண்ட்டுகளின் சராசரி வயதை பொருத்து உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் குறையலாம்.
எனவே ஏற்கனவே நீங்கள் வைத்திருக்கக்கூடிய பல்வேறு வகையான கிரெடிட் அக்கவுண்டுகளை பொறுப்புடன் கையாளுவதில் கவனம் செலுத்துங்கள்.
உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை கணக்கிடும் சமயத்தில் பல்வேறு எண்ணிக்கையிலான கிரெடிட் ஸ்கோரிங் மாடல்கள் உங்களின் கிரெடிட் அக்கவுண்டுகளின் பன்முகத்தன்மை கருத்தில் கொள்ளும்.
உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை பாதிக்கக்கூடிய கிரெடிட் மிக்ஸின் தாக்கமானது தனிநபரின் சூழ்நிலைகள் மற்றும் குறிப்பாக பயன்படுத்தப்பட்டுள்ள கிரெடிட் ஸ்கூரிங் மாடலை பொருத்து அமையும்.
Also Read |
பெண் பிள்ளைகளின் எதிர்காலம் காக்கும் செல்வமகள் சேமிப்பு திட்டம்! வட்டி விவரம் இங்கே!
நல்ல கிரெடிட் ஸ்கோர் வைத்திருந்தால் மட்டுமே நீங்கள் விரும்பும் கடன்களை எளிதாக வாங்க முடியும். இல்லையெனில் உங்கள் லோன் அப்ரூவ் ஆவதில் சிக்கல்கள் ஏற்படலாம் அல்லது தாமதமாகலாம். மேலும் உங்களுக்கு அதிக வட்டியிலான கடன்கள் வழங்கப்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே கிரெடிட் ஸ்கோரை எதிர்மறையாக பாதிக்கக்கூடிய எந்த ஒரு விஷயத்தையும் செய்யாதீர்கள். ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை அனாவசியமாக வைத்திருப்பது நல்லதல்ல. நீங்கள் பயன்படுத்தாமல் இருக்கும் கிரெடிட் கார்டு அக்கவுண்டுகளை மூடி விடுவது நல்லது. இறுதியாக கிரெடிட் ஸ்கோர் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…