[ad_1]
ஃபின்டெக் மற்றும் ஃபைனான்ஷியல் சேவைகளின் எழுச்சியின் காரணமாக ஒட்டுமொத்த வங்கி துறையே மிகப்பெரிய மாற்றத்திற்கு ஆளாகியுள்ளது. உலகின் 8 சதவீத பணம் மட்டுமே காகித வடிவில் இருப்பதாகவும், மீதமிருக்கக் கூடியவை கம்ப்யூட்டர் மெமரியில் வெறும் இலக்கங்களாக இருப்பதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.
தொழில்நுட்பத்தின் உதவியுடன் நம்மால் தற்போது பை நவ் பே லேட்டர் (Buy Now Pay Later – BNPL), கிரெடிட் கார்டுகள் மற்றும் பல போன்ற பேமெண்ட் ஆப்ஷன்களை பயன்படுத்த முடிகிறது. இவை வெறுமனே சந்தையில் மாற்றங்களை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கிரெடிட் அமைப்பின் சூழலையே மாற்றி விடுகின்றன.
இந்திய பொருளாதார அமைப்பில் பை நவ் பே லேட்டர் :
பை நவ் பே லேட்டர் என்ற ஆன்லைன் பேமெண்ட் கிரெடிட் சிஸ்டத்தில் கஸ்டமர்கள் தங்களுக்கு விருப்பமான பொருட்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்களில் வாங்கிக் கொண்டு அதற்கான பணத்தை எந்த ஒரு வட்டியும் இல்லாமல் பிறகு செலுத்தலாம். தற்போது இந்திய பொருளாதார அமைப்பில் இந்த பை நவ் பே லேட்டர் சேவைகள் வலிமையான பேமெண்ட் முறையாக மாறிவிட்டது. குறிப்பாக இளைஞர்கள் இந்த டிஜிட்டல் பொருளாதார சேவைகளை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.
கிரெடிட் கார்டுகளைப் போல அல்லாமல் BNPL சேவைகளில் எந்தவிதமான பிராசசிங் கட்டணம், நுழைவு கட்டணம் அல்லது ஆண்டுவாரியான கட்டணம் எதுவும் கிடையாது. அதுமட்டுமல்லாமல், BNPL பொதுவாக குறைந்த வட்டி விகிதங்களை வசூலிப்பதால் பலருக்கு இது சிறந்த ஒரு பேமெண்ட் ஆப்ஷனாக செயல்படுகிறது. மேலும் BNPL கன்ஸ்யூமர்களுக்கு எந்த ஒரு அபராதமும் இல்லாமல், செலவு செய்த பணத்தை திருப்பி வழங்குவதற்கு 10 முதல் 30 நாட்கள் வரையிலான வட்டி இல்லா கால அவகாசத்தை வழங்குகிறது.
கிரெடிட் கார்டுகள் vs பை நவ் பே லேட்டர் (BNPL) :
தற்போது பலர் கிரெடிட் கார்டுகளுக்கு பதிலாக BNPL பயன்படுத்த தொடங்கி விட்டனர். தற்போது 22 சதவீத இந்திய கன்ஸ்யூமர்கள் BNPL சேவைகளை பயன்படுத்தி ஆன்லைன் ஷாப்பிங் செய்வதாக தெரியவந்துள்ளது. இந்த சதவீதம் வரக்கூடிய வருடங்களில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
BNPL ட்ரான்ஸாக்ஷன்களை செய்வது எளிதானது என்றாலும் கூட, கடனை திருப்பி செலுத்தாவிட்டாலோ அல்லது தாமதமாக செலுத்தினாலோ அதனால் தனிநபரின் கிரெடிட் ஸ்கோர் மற்றும் பொதுவான பொருளாதார நிலைப்பாட்டில் ஏற்படக்கூடிய எதிர்மறையான தாக்கம் குறித்து ஒருவர் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். முன்னதாக கிரெடிட் கார்டுகள் அசல் BNPL ப்ராடக்ட் ஆக இருந்து வந்தது. இதன் மூலமாக வட்டி இல்லா EMI வழங்கக்கூடிய லோன் ப்ராடக்டுகள் கொடுக்கப்பட்டு வந்தன.
Also Read : இந்தியாவில் உள்ள சிஇஓ-க்களின் சராசரி ஊதியம் எவ்வளவு தெரியுமா? ஆய்வு சொல்லும் தகவல்
கிரெடிட் லிமிட் மற்றும் கடனை திருப்பி செலுத்துவதற்கான அமைப்பு ஆகியவை கிரெடிட் கார்டுகள் மற்றும் BNPL இடையேயான முக்கியமான வேறுபாடு. பணமில்லா எதிர்காலத்தை நோக்கிய இன்றைய காலகட்டத்தில் தொழில்கள் மற்றும் கன்ஸ்யூமர்கள் ஆகிய இருவருமே இதுபோன்ற பேமெண்ட் ஆப்ஷன்களில் இருக்கக்கூடிய சாதகங்கள் மற்றும் பாதகங்களை நன்கு தெரிந்து கொண்டு அவற்றை பயன்படுத்த வேண்டும். BNPL பல்வேறு நன்மைகளை அளிக்கிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது என்றாலும் கடன் வாங்கும் பழக்கத்தை பொறுப்புடன் கையாளுவது அவசியம். பொருளாதார தேர்வுகளை புத்திசாலித்தனமாக எடுத்து, கடன்களை திருப்பி வழங்குவதற்கு முன்னுரிமை வழங்குவதன் மூலமாக நீண்ட கால பொருளாதார பாதுகாப்பை ஒருவர் உறுதி செய்யலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…