Last Updated:
கிரெடிட் கார்டு பயன்படுத்தி நீங்கள் செய்யும் ஒவ்வொரு டிரான்ஸாக்ஷனுக்கு பின்னணியிலும் உங்களுடைய கடன் சுய விவரம், கடன் வரலாறு ஆகியவை வடிவமைக்கப்பட்டு, அதன் மூலமாக உங்களுடைய கிரெடிட் ஸ்கோரில் தாக்கம் ஏற்படுகிறது.
இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மே 2025 கணக்கீட்டின்படி, இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 111 மில்லியன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளது தெரியவந்துள்ளது. இது 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இரண்டு மடங்காக இருக்கிறது. அதேபோல கார்டுகளை பயன்படுத்தி செய்யப்படும் மாத செலவுகள் மே மாதத்தில் 1.89 டிரில்லியன் ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறிய நகரங்கள் முதல் மெட்ரோ நகரங்கள் வரை எல்லா இடங்களிலுமே இந்த மாற்றமானது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கிரெடிட் கார்டு பயன்படுத்தி நீங்கள் செய்யும் ஒவ்வொரு டிரான்ஸாக்ஷனுக்கு பின்னணியிலும் உங்களுடைய கடன் சுய விவரம், கடன் வரலாறு ஆகியவை வடிவமைக்கப்பட்டு, அதன் மூலமாக உங்களுடைய கிரெடிட் ஸ்கோரில் தாக்கம் ஏற்படுகிறது. இது எப்படி என்பது பற்றிய சில கூடுதல் தகவல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
சரியான நேரத்தில் செய்யும் பேமெண்ட்கள் மற்றும் குறைவான கடன் பயனீடு உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை எப்படி அதிகரிக்கிறது? உங்களுடைய கிரெடிட் கார்டின் திருப்பிச் செலுத்தும் வரலாறு என்பது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரில் முக்கியமான தாக்கத்தைக் கொண்டுள்ளது. உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடனை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்தி, அதனை முறையாக திருப்பி செலுத்துகிறீர்கள் என்பதற்கான நிரூபணமே உங்களுடைய இந்த கடனை திருப்பிச் செலுத்தும் வரலாறு. ஒரு பேமெண்ட்டை கூட தவறவிடாமல், நிலுவையில் உள்ள மொத்த தொகையையும் செலுத்திவரும் பட்சத்தில் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் அதிகமாகும்.
மறுபுறம் ஒரு பேமெண்ட் தவறினாலோ அல்லது சற்று தாமதமாக செலுத்தினாலோ, அது கடன் பெறுநரின் கிரெடிட் சுய விவரத்தை எதிர்மறையாக பாதிக்கலாம். மிக முக்கியமாக தொடர்ச்சியாக குறைந்தபட்ச டியூ தொகையை மட்டுமே செலுத்தி வந்தால், அது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை குறைக்கும். இது நீங்கள் கடனை சார்ந்து இருக்கிறீர்கள் என்பதையும், பொருளாதார அழுத்தத்தையும் வெளிப்படுத்தும் ஒரு தெளிவான அறிகுறி. மற்றொரு முக்கியமான காரணி கடன் பயனீட்டு விகிதம்.
அதாவது உங்களுடைய கிரெடிட் கார்டில் ஒரு லட்ச ரூபாய் வரையிலான லிமிட் கொடுக்கப்பட்டிருப்பதாக வைத்துக் கொள்வோம். ஆனால், இந்த வரம்பை நீங்கள் முழுவதுமாக பயன்படுத்தக் கூடாது. உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 1 லட்ச ரூபாயில் 30,000 ரூபாய்க்கு மேல் செலவு செய்யக்கூடாது. இதனால் உங்களுடைய கடன் பயனீட்டு விகிதமானது 30 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும். ஒருவேளை உங்களுடைய கடன் பயனீட்டு விகிதம் 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தால் அதனால் எதிர்காலத்தில் உங்களுக்கு அதிக வட்டி விகிதங்கள் அல்லது தனிநபர் கடன் விண்ணப்பங்கள் நிராகரிப்பு போன்ற பிரச்சனைகள் எழலாம்.
- கிரெடிட் கார்டு பில்களை சரியான டியூ தேதிக்கு முன்பாகவோ அல்லது குறிப்பிட்ட அந்த தேதியில் செலுத்துங்கள்.
- கடன் பயனீட்டு விகிதம் 30 சதவீதத்திற்கும் அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளவும்.
- கிரெடிட் கார்டுகளின் நிலுவையில் உள்ள பேலன்ஸ் தொகையை சேர்த்து வைக்க வேண்டாம்.
- கிரெடிட் ரிப்போர்ட்டை அடிக்கடி கண்காணிக்கவும். அதில் ஏதேனும் முரண்பாடுகள் இருக்கும் பட்சத்தில் புகாரை எழுப்பி உடனடியாக அதனை சரிசெய்யவும்.
- ஒவ்வொரு மாதமும் பேமெண்ட்களை சரியான நேரத்தில் செலுத்துவதற்கு ஆட்டோ பே முறை அல்லது நினைவூட்டல்களை அமைத்துக் கொள்ளவும்.
- கிரெடிட் கார்டு சம்பந்தப்பட்ட ஆஃபர்கள் மற்றும் புதிய மேம்பாடுகள் பற்றி அப்டேட்டாக இருப்பதற்கு உங்களுக்கு கிரெடிட் கார்டு வழங்கிய நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஆதரவு குழுவுடன் தொடர்பில் இருக்கவும்.
RBIன் புதிய கடன் அறிக்கை விதிகள்:
முன்னதாக கடன் வழங்குனர்கள் கடன் செயல்பாடுகளை மாதம் ஒருமுறை அறிக்கையிட வேண்டி இருந்தது. ஆனால், இப்போது ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை இதனை அவர்கள் செய்ய வேண்டும். இதன்மூலம் உங்களுடைய கடன் சுய விவரம் முன்பைவிட விரைவாக அப்டேட் செய்யப்படும். அதே காரணத்திற்காக உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் மீது உடனடி தாக்கம் ஏற்படும்.
சரியான அனுமதி அல்லது ஒப்புதல் இல்லாமல் கிரெடிட் கார்டு வழங்கக் கூடாது என்பதையும் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா கூறியுள்ளது. எனவே, முன்பைவிட கடன் வழங்குதல் என்பது சீரமைக்கப்பட்டு, முறையாக மற்றும் தரவு அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. உங்களுடைய கிரெடிட் கார்டை சரியாக பயன்படுத்தினால் போதுமானது. அதேபோல பேமெண்ட்களை சரியான நேரத்தில் செலுத்துங்கள்.
August 30, 2025 9:55 PM IST
கிரெடிட் கார்டை ஒவ்வொரு முறை ஸ்வைப் செய்வதும் கடன் விண்ணப்பங்களை பாதிக்குமா…? உண்மை என்ன…?


