கிரெடிட் லிமிட் உச்சவரம்பை கடக்கும் போது என்ன ஆகும்?
பொதுவாக உங்களுடைய கிரெடிட் கார்டு ஒரு குறிப்பிட்ட உச்சவரம்பு என்பது வழங்கப்பட்டிருக்கும். அது நீங்கள் செலவு செய்ய வேண்டிய அதிகபட்ச தொகையாக அமையும். ஒருவேளை இந்த தொகையை விட அதிகமாக நீங்கள் செலவு செய்தால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும். ஒரு சில கிரெடிட் கார்டு வழங்குனர்கள் உச்சவரம்பை அடைந்த பிறகு கிரெடிட் கார்டை பயன்படுத்த முடியாதபடி செய்து விடுவார்கள். எனினும் ஒரு சிலர் அப்படி இருப்பதில்லை. எனவே உச்சவிரம்பை தாண்டி நீங்கள் டிரான்சாக்ஷன்களை செய்யும்போது அதற்கான கட்டணங்களை நீங்கள் சேர்த்து செலுத்த வேண்டும்.
கிரெடிட் கார்டு உச்சவரம்பு சம்பந்தமான விதிமுறைகள்:
எதிர்பாராத கட்டணங்களில் இருந்து கிரெடிட் கார்ட் ஹோல்டர்களை பாதுகாப்பதற்காகவே ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா ஒரு சில விதிகளை அமைத்துள்ளது. RBI விதிமுறைகளின் படி, நியமிக்கப்பட்ட கிரெடிட் கார்டு உச்சவரம்பை விட அதிகமாக கிரெடிட் கார்டை பயன்படுத்துவதற்கு முன்கூட்டியே கிரெடிட் கார்டு ஹோல்டரின் ஒப்புதல் தேவைப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் உச்சவரம்பை விட அதிகமாக டிரான்சாக்ஷன்களை செய்வதற்கான ஆப்ஷனை எனேபிள் செய்ய வேண்டுமா? அல்லது வேண்டாமா என்ற தேர்வை வழங்குவதற்கு இன்டர்நெட் அல்லது மொபைல் பேங்கிங் மூலமாக கருவிகளை வழங்க வேண்டும் என்று அந்த விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. முக்கியமாக, கார்டு ஹோல்டர் ஒப்புதல் வழங்காமல் அதிகமாக செலவு செய்ய அல்லது இது சம்பந்தமாக கட்டணங்களை விதிக்க வங்கிகளுக்கு அனுமதி கிடையாது.
கிரெடிட் ஸ்கோர் மீதான தாக்கம்:
உங்களுடைய கிரெடிட் லிமிட்டை விட அதிகமாக செலவு செய்வது என்பது பொருளாதார அசௌகரியத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் அது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரையும் பாதிக்கலாம். கிரெடிட் லிமிட்டை விட அதிகமாக செலவு செய்யும்போது உங்களுடைய கிரெடிட் பயனீட்டு விகிதம் அதிகரிக்கும். இதனால் கடனை நீங்கள் பொறுப்புடன் கையாளுகிறீர்கள் என்ற உங்கள் மீதான நம்பிக்கை குறைகிறது.
கிரெடிட் லிமிட்டை கடப்பதனால் விதிக்கப்படும் கட்டணங்களை தவிர்ப்பது எப்படி?
கிரெடிட் கார்டு பயன்படுத்தி நீங்கள் செய்யும் செலவுகளை எப்போதும் கண்காணிப்பது அவசியம். உங்களுடைய செலவை கண்காணிப்பதற்காகவே பெரும்பாலான வங்கிகள் மொபைல் அப்ளிகேஷன்கள் மற்றும் ஆன்லைன் பிளாட்ஃபார்ம்களை வழங்குகின்றன.
அலர்ட்டுகளை அமைக்கவும்:
உங்களுடைய கிரெடிட் லிமிட்டை நெருங்கும் போது உங்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்கு பல கிரெடிட் கார்டு வழங்குனர்கள் நோட்டிஃபிகேஷன்களை அமைப்பதற்கான ஆப்ஷன்களை கொடுக்கின்றன. எனவே இந்த அலர்ட் செட்டிங்ஸை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ஓவர்-லிமிட் டிரான்ஸாக்ஷன்கள்:
உங்களுக்கு வழங்கப்பட்ட கிரெடிட் கார்டு உச்சவரம்பை கடக்கும் போது எந்த விதமான டிரான்சாக்ஷன்களையும் செய்வதை தடுப்பதற்கு அந்த ஆப்ஷனை நீங்கள் டிசேபிள் செய்ய வேண்டும். எனவே இதனால் கூடுதல் கட்டணங்களை தவிர்க்கலாம்.
மாதம் முழுவதும் பேமெண்ட்களை செலுத்துதல்:
பில்லிங் சைக்கிள் வரும் வரை காத்திருப்பதற்கு பதிலாக மாதம் முழுவதும் பேமெண்ட்களை அவ்வப்போது செலுத்தி விடுங்கள்.
கிரெடிட் லிமிட்டை அதிகரிக்க கோரிக்கை விடுத்தல்:
ஒருவேளை தொடர்ச்சியாக உங்களுக்கு வழங்கப்பட்ட லிமிட்டை விட உங்களுக்கு அதிகமாக பணம் தேவைப்படும் பட்சத்தில் உங்களுக்கு அதிக கிரெடிட் உச்சவரம்பை வழங்கும் படி கிரெடிட் கார்டு வழங்குனர்களிடம் நீங்கள் கோரிக்கை விடுக்கலாம்.
எனவே உங்களுடைய கிரெடிட் கார்டு லிமிட்டை கண்காணிப்பதன் மூலமாக கூடுதல் கட்டணங்களை தவிர்த்து எந்த ஒரு பொருளாதார சிக்கல் இல்லாமல் சுமூகமாக அதனை கையாளலாம்.
கிரெடிட் கார்டு லிமிட்டை விட அதிகமாக செலவு செய்தால் என்னவாகும் தெரியுமா? பலருக்கும் தெரியாது

