Last Updated:
ஒருவேளை ஒரு குறுகிய காலகட்டத்தில் உங்களுக்கு உடனடியாக பணம் தேவைப்பட்டால் நீங்கள் கிரெடிட் கார்டு கடனை வாங்கலாம்.
நமக்கு பணத்தட்டுப்பாடு ஏற்படும் போது நம்மில் பெரும்பாலானவர்கள் நாடும் மிக விரைவான கடன் ஆப்ஷன்கள் என்பது உடனடி பர்சனல் லோன்கள் மற்றும் கிரெடிட் கார்டு லோன்கள் தான். இந்த இரண்டிலுமே நமக்கான கடன் தொகை விரைவாக வழங்கப்படுவதோடு, குறைந்தபட்ச ஆவணங்கள் தேவைப்படுகிறது. ஆனால் இந்த இரண்டு கடனையும் நீங்கள் திருப்பி செலுத்தும் செயல்முறை வேறுபட்டதாக இருக்கும்.
ஒன்று உங்களுக்கான திருப்பி செலுத்தும் கால அளவை மாற்றுவதற்கும், பிற விதிகள் மற்றும் நிபந்தனைகளில் தளர்வுகளை வழங்கக்கூடியது. மறுபுறம் மற்றொன்று நீங்கள் ஒரு மாதம் கடனை செலுத்த தவறினால் கூட உங்களை கடன் வலைக்குள் மாட்டிவிட முயலலாம். எனவே இந்த இரண்டில் ஒன்றை தேர்வு செய்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக அமைகிறது.
இன்ஸ்டன்ட் லோன்கள் பொருத்தவரை கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அளவு, EMI மற்றும் மொத்தமாக நீங்கள் எவ்வளவு தொகையை திருப்பி செலுத்த வேண்டும் என்பது ஆரம்பத்திலேயே உங்களுக்கு தெரியும். அதோடு எவ்வளவு காலத்தில் உங்களால் கடனை திருப்பி செலுத்த முடியும் என்பதை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். இதற்கான டியூ தேதிகளை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஒவ்வொரு மாதமும் வழக்கமான முறையில் மாத தவணைகளை நீங்கள் செலுத்தலாம். ஆனால் இன்ஸ்டன்ட் லோன்கள் என்பது வழக்கமாக பர்சனல் லோன்களை விட அதிக வட்டி விகிதங்களோடு வருகிறது. அதோடு இதற்கான கன்வீனியன்ஸ் கட்டணங்கள் அல்லது பிராசசிங் கட்டணங்களும் அதிகமாக இருக்கும். இதற்கான EMI என்பது நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான ஒன்றாக இருக்கலாம்.
கிரெடிட் கார்டுகள் இரண்டு வகையான லோன்களை வழங்குகின்றன. ஒன்று கேஷ் வித்டிராயல், மற்றொன்று கார்டு மீதான கடன். இதில் கேஷ் வித்டிராயல் என்பது மிக விலை உயர்ந்த கடனாக கருதப்படுகிறது. நீங்கள் பணத்தை வித்டிரா செய்த உடனேயே அதற்கான வட்டி துவங்குகிறது. இதற்கு பெரும்பாலும் அதிக வட்டி விகிதங்கள் வசூலிக்கப்படுகிறது. அதோடு ATM கட்டணங்களையும் நீங்கள் செலுத்த வேண்டும். இது அவசர கால தேவைக்கு மட்டுமே ஏற்றது. மறுபுறம் கிரெடிட் கார்டுகள் மீதான கடன்கள் என்பது வேறு விதமாக செயல்படுகிறது அல்லது உங்களுக்கு வழங்கப்பட்ட கடன் வரம்பில் முன்கூட்டியே அங்கீகரிக்கப்பட்ட கடனாக வழங்குவார்கள். இதற்கு எந்த ஒரு ஆவணம், காத்திருப்பு காலம் அல்லது டிரான்ஸ்ஃபர் செய்வதில் தாமதங்கள் கிடையாது. உங்களுக்கு ஒரு குறுகிய காலகட்டத்தில் பணம் தேவை ஏற்படும்போது இந்த கார்டு அடிப்படையிலான கடன்கள் உதவியாக இருக்கும்.
ஒருவேளை ஒரு குறுகிய காலகட்டத்தில் உங்களுக்கு உடனடியாக பணம் தேவைப்பட்டால் நீங்கள் கிரெடிட் கார்டு கடனை வாங்கலாம். இதுவே ஒரு நீண்ட கால அளவில் தேவைப்படும் பணத்திற்கு இன்ஸ்டன்ட் லோனை கருத்தில் கொள்ளலாம். மருத்துவ செலவுகள், பயணம், வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவது, கல்வி கடன் போன்றவை நீண்ட கால தேவைகளாக கருதப்படுகின்றன. குறைவான EMI என்பது உங்களை உடனடியாக அந்த கடனை வாங்கும் படி தூண்டலாம். ஆனால் அந்த கடனுக்கான மொத்த செலவு என்பது நிச்சயமாக அதிகமாக இருக்கும்.
அதோடு இன்ஸ்டன்ட் லோன்களில் ப்ராசசிங் கட்டணங்கள் சேர்க்கப்படும். கிரெடிட் கார்டில் லோன்களை பொருத்தவரை, காலப்போக்கில் அதில் நீங்கள் அதிக வட்டி செலுத்த வேண்டும். எனவே எப்பொழுதும் வங்கிகள் வழங்கும் கால்குலேட்டர்களை பயன்படுத்தி பல்வேறு ஆப்ஷன்களை ஒப்பிட்டு பார்ப்பது நல்லது. உதாரணமாக EMI செலுத்தாமல் உங்களுடைய கிரெடிட் கார்டு பேலன்ஸில் நீங்கள் ஒரு லட்ச ரூபாயை கடனாக வாங்கி இருந்தால் அதற்கான மாத வட்டி என்பது அடுத்தடுத்த மாதங்களில் நீங்கள் நினைத்துப் பார்க்காத அளவிற்கு அதிகமாகும். இதையே நீங்கள் இன்ஸ்டன்ட் லோனாக எடுக்கும் போது ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக திருப்பி செலுத்தி விடுவீர்கள்.
December 16, 2025 9:45 AM IST


