இன்றைய போட்டி நிறைந்த மார்க்கெட்டில் உங்களுடைய பணத்திற்காக போட்டியிடும் பல்வேறு ப்ராடக்ட்கள் உள்ளன. எனவே, கிரெடிட் கார்டு பற்றிய உண்மைகளை புரிந்துகொள்வது என்பது மிகவும் முக்கியமானதாக அமைகிறது. ஆகையால், இந்தப் பதிவில் கிரெடிட் கார்டு பற்றிய பொதுவான சில கட்டுக்கதைகள் மற்றும் அதற்கு பின்னணியில் உள்ள உண்மைகள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
கட்டுக்கதை 1: பேலன்ஸ் வைத்திருப்பது கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்கும்
ஒவ்வொரு மாதமும் பேலன்ஸ் செலுத்துவது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்க உதவும் என்பது ஒரு பொதுவான கட்டுக்கதை. ஆனால், உண்மையில் இது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை பாதிக்கலாம். பேலன்ஸை முழுமையாக செலுத்தும் கடன் பெற்றவர்களுக்கு CIBIL மற்றும் Experian சிறந்த கிரெடிட் ரேட்டிங்கை வழங்குகின்றன. நீங்கள் பேலன்ஸை செலுத்துவது என்று வரும்போது உங்களுடைய வட்டியைச் செலுத்துகிறீர்கள் என்று அர்த்தம். உண்மையில் பேலன்ஸை சரியான நேரத்தில் முழுமையாக செலுத்துவது உங்களுடைய கிரெடிட் வரலாற்றை அதிகரிப்பதில் அதிகத் தாக்கத்தைக் கொண்டுள்ளது.
கட்டுக்கதை 2: உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை நீங்களே தெரிந்துகொள்வது ஸ்கோரை குறைக்கும்
இது தொடர்ச்சியாக நீடித்துவரும் ஒரு கட்டுக்கதை. வங்கிகள் செய்யும் ஹார்ட் செக் உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை ஓரளவு பாதிக்கலாம். ஆனால், சாஃப்ட் செக் என்று அழைக்கப்படும் நீங்களே உங்களுடைய ஸ்கோரை சரிபார்க்கும் செயல்முறையால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படாது. சொல்லப்போனால், வழக்கமான முறையில் உங்களுடைய ரிப்போர்ட்டை சரிபார்ப்பது ஒரு நல்ல யோசனை. இதன்மூலமாக உங்களுடைய அடையாளம் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது அல்லது பிழைகளை கண்டுபிடிப்பதற்கு இது உதவும்.
கட்டுக்கதை 3: கிரெடிட் கார்டுகள் எமர்ஜென்சி சமயத்தில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன
கிரெடிட் கார்டு என்பது உங்களுடைய கிரெடிட் வரலாற்றை அமைப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும். கார்டுகள் பொதுவாக ரிவார்டுகள், கேஷ்பேக், டிஸ்கவுன்ட் மற்றும் மோசடிகளில் இருந்து பாதுகாப்பு போன்றவற்றை வழங்குகின்றன. எனவே, கார்டை பயன்படுத்தாமல் இருப்பது என்பது உங்களுடைய பொருளாதார பலன்களை இழக்கச் செய்கிறது. இதனால் எதிர்காலத்தில் குறைவான வட்டி விகிதங்களில் கடன்கள் பெறுவது உங்களுக்கு சிக்கலாக அமையலாம்.
கட்டுக்கதை 4: அதிக கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பதால் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படலாம்
ஒரு குறுகிய காலத்தில் பல கிரெடிட் கார்டுகளை வாங்குவது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை ஓரளவு பாதிக்கலாம். ஆனால், அதிக கார்டுகளை வைத்திருப்பது ஒரு மோசமான விஷயம் கிடையாது. ஒரே கார்டில் செலவுகளைச் செய்யாமல் பல்வேறு கார்டுகளை நீங்கள் பயன்படுத்தும்போது, அது உங்களுடைய கிரெடிட் பயனீட்டு விகிதத்தை குறைக்கிறது. இதனால் கிரெடிட் ஸ்கோர் அதிகமாகும்.
பெரும்பாலான கார்டு ஹோல்டர்கள் வட்டி விகிதங்கள் அல்லது அபராதங்களை தவிர்ப்பதற்கு குறைந்தபட்ச டியூ தொகையை செலுத்தினால் போதும் என்று நினைத்து வருகின்றனர். ஆனால், இது உண்மை கிடையாது. இதனால் தாமதமாக கட்டணங்களை செலுத்துவதற்கான அபராதங்களை நீங்கள் கட்டாயமாகச் செலுத்த வேண்டும். நிலுவையில் உள்ள பேலன்ஸ் தொகைக்கு தொடர்ந்து வட்டி விகிதமானது வசூலிக்கப்படும். இதனால் நாளடைவில் உங்களுடைய கடனானது பலூன் போல பெரிதாகிக்கொண்டே போகும். எனவே எப்பொழுதும் உங்களுடைய டியூ தொகையை முழுமையாகச் செலுத்துவது அவசியம்.
கட்டுக்கதை 6: ஆண்டுவாரியான கட்டணம் 0 என்றால், கார்டுக்கான செலவும் முற்றிலும் 0
ஒரு சில கார்டுகள் ‘லைஃப் டைம் ஃப்ரீ’ அல்லது ‘ஜீரோ ஆனுவல் ஃபீஸ்’ போன்ற வழிகளில் மார்க்கெட் செய்யப்படுகின்றன. ஆனால், இந்த கார்டுகளுக்கும் தொடர்ந்து வேறு மாதிரியான கட்டணங்கள் வசூலிக்கப்படும். தாமதமாக பேமெண்ட் செலுத்துவதற்கான கட்டணங்கள், பணத்தை வித்டிரா செய்வதற்கான கட்டணங்கள் போன்றவை அடங்கும். எனவே, ஒரு கார்டு இலவசமாக வழங்கப்படுகிறது என்பதற்காக அதனை வாங்குவது புத்திசாலித்தனமானதாக இருக்காது. மாறாக கார்டு சம்பந்தப்பட்ட விதிகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாகப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
TransUnion CIBIL 2024 வெளியிட்ட ஒரு அறிக்கையில், 47 சதவீத இந்திய கிரெடிட் கார்டு ஹோல்டர்களுக்கு கிரெடிட் ஸ்கோர் எப்படி கணக்கிடப்படுகிறது என்பது சம்பந்தமான சரியான யோசனை இல்லை என்று தெரியவந்துள்ளது. RBI வழங்கும் நுகர்வோர் விழிப்புணர்வு சுற்றறிக்கைகள் அல்லது SEBI மற்றும் EPFO வழங்கும் முதலீட்டாளர் கல்வி போர்ட்டல்களை படித்துத் தெரிந்துகொண்டு நம்மை அப்டேட்டாக வைப்பது மிகவும் அவசியம்.
July 01, 2025 2:08 PM IST
கிரெடிட் கார்டுல பேலன்ஸ் வச்சிருந்தா கிரெடிட் ஸ்கோர் அதிகமாகும்னு சொன்னதெல்லாம் புரளியா…? இது தெரியாம போச்சே…?