Last Updated:
பெரும்பாலான கிரெடிட் கார்டு யூசர்களுக்கு கிரெடிட் கார்டு சம்பந்தப்பட்ட பலன்கள் பற்றி முழுமையாக தெரிவது கிடையாது.
கையில் போதுமான அளவு பணம் இல்லாத காரணத்தால் ஷாப்பிங் திட்டங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப்போட்ட காலங்கள் உண்டு. ஆனால், இப்போது கிரெடிட் கார்டுகள் இந்த கதையை முற்றிலுமாக மாற்றிவிட்டன. இன்று 10 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இந்த எண்ணிக்கையானது ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகின்றன.
ஆனால், பெரும்பாலான கிரெடிட் கார்டு யூசர்களுக்கு கிரெடிட் கார்டு சம்பந்தப்பட்ட பலன்கள் பற்றி முழுமையாக தெரிவது கிடையாது. அந்த அம்சங்களை தெரிந்து கொள்வதன் மூலமாக ஸ்மார்ட்டாக உங்களால் பணத்தை சேமித்து, செலவுகளை சிறந்த முறையில் நிர்வகிக்க முடியும். அந்த வகையில் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதால் கிடைக்கக்கூடிய சில மறைமுகமான பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஒருவேளை உங்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகள் இருந்து, அவை அனைத்திற்கும் சரியான நேரத்தில் பில்களை செலுத்துவதற்கு நீங்கள் சிரமப்பட்டு வந்தால், உங்களுக்கு ஒரு எளிமையான தீர்வு உள்ளது. அதுதான் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் அம்சம். இதன் மூலமாக குறைவான வட்டி விகிதம் வசூலிக்கக்கூடிய ஒரு கார்டிலிருந்து மற்றொரு கார்டுக்கு உங்களால் பேலன்ஸை டிரான்ஸ்ஃபர் செய்ய முடியும். இவ்வாறு செய்வதன்மூலம், உங்களுடைய மொத்த வட்டி விகிதம் குறையும். ஆனால், இதற்கு ஒரு சிறிய அளவிலான பிராசசிங் கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், நாளடைவில் இதன் மூலமாக உங்களால் நிச்சயமாக பணத்தை சேமிக்க முடியும்.
கிரெடிட் கார்டுகள் என்பது வெறும் ஷாப்பிங் செய்வதற்கு மட்டுமல்ல. பல வங்கிகள் கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தும் யூசர்களுக்கு எரிபொருள் சார்ந்த சில நன்மைகளையும் வழங்குகின்றன. உதாரணமாக, ஒவ்வொரு முறை உங்களுடைய வாகனத்திற்கு நீங்கள் எரிபொருள் நிரப்பும்போது 1% வரையிலான கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.
நாளடைவில் இதனால் ஒரு பெரிய அளவிலான தொகையை உங்களால் சேமிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், பல கிரெடிட் கார்டுகள் தற்போது எந்தவொரு கூடுதல் செலவும் இல்லாமல் குடும்பத்தில் உள்ள பிற உறுப்பினர்களுக்கு ஆட்-ஆன் கார்டுகளை வழங்குகின்றனர். இந்த கார்டு முதன்மையான கிரெடிட் கார்டு வழங்கும் அதே அளவு நன்மைகளை வழங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு புதிய போன், ரெஃப்ரிஜிரேட்டர் அல்லது சோபா செட் வாங்கும் எண்ணம் உங்களுக்கு உள்ளதா? அப்படி என்றால் இந்த பெரிய அளவிலான செலவுகளை நோ காஸ்ட் EMI ஆப்ஷன் மூலமாக கிரெடிட் கார்டுகளில் வாங்கும் போது கூடுதல் வட்டி எதுவும் செலுத்தாமல் அதற்கான மாத தவணைகளை எளிமையான முறையில் உங்களால் செலுத்த முடியும்.
October 23, 2025 7:16 PM IST


