Last Updated:
இந்தச் சம்பவம் குறித்து பல ஆண்டுகளாக யூகங்கள் நிலவி வந்த நிலையில், வீடியோவை வெளியிட்டு உண்மையை வெளிப்படுத்த விரும்புவதாக லலித் மோடி கூறியிருந்தார்.
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கன்னத்தில் மற்றொரு கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் பளார் என அறை விட்ட வீடியோ 18 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து ஏற்கனவே பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், யாரும் பார்க்காத வீடியோ வெளிவந்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
2008 ஆம் ஆண்டு, முதல் ஐபிஎல் சீசனில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிக்குப் பிறகு இந்தச் சம்பவம் நடைபெற்றது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக இந்த தொடரில் பவுலர் ஸ்ரீசாந்த் விளையாடினார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்பஜன் சிங் இடம்பெற்றிருந்தார்.
போட்டி முடிந்த பிறகு, வீரர்கள் வழக்கம்போல் கைகுலுக்கும்போது, ஹர்பஜன் சிங் திடீரென ஸ்ரீசாந்தை அறைந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ஸ்ரீசாந்த் மைதானத்திலேயே அழுதுகொண்டிருந்த காட்சி தொலைக்காட்சி ஒளிபரப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் முன்னாள் ஐபிஎல் நிர்வாகியான லலித் மோடி சமீபத்தில் ஒரு போட்காஸ்டில் (podcast) பேசும்போது, இந்தச் சம்பவத்தில் யாரும் பார்த்திராத வீடியோ தன் வசம் இருப்பதாகவும், அதை அவர் வெளியிடப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து கடந்த பல ஆண்டுகளாகப் பல்வேறு யூகங்கள் நிலவி வந்த நிலையில், இந்த வீடியோவை வெளியிட்டு உண்மையை வெளிப்படுத்த விரும்புவதாக அவர் கூறியிருந்தார். இந்நிலையில் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
August 29, 2025 7:13 PM IST


