[ad_1]
Last Updated:
ஷிகர் தவன் 1X Bet ஆன்லைன் சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்தியதால் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் முன்னதாக ஆஜரானார்கள்.
சட்டவிரோத ஆன்லைன் சூதாட்டச் செயலியை விளம்பரப்படுத்தியதற்காக இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவான். இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருந்தவர், ஐபிஎல்லிலும் சிறப்பாகச் செயலாற்றினார். சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின் தற்போது வர்ணனையாளராக இருந்து வருகிறார். இதற்கிடையே தான் சட்டவிரோத ஆன்லைன் சூதாட்டச் செயலியை விளம்பரப்படுத்தியதற்காக ஷிகர் தவனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 1X Bet ஆன்லைன் சூதாட்டச் செயலியை தனது சமூக வலைதளப்பக்கத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷிகர் தவான் விளம்பரப்படுத்தியுள்ளார். இதற்காக நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
ஆன்லைன் சூதாட்டச் செயலி மூலமாக சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் சட்டவிரோத ஆன்லைன் சூதாட்டச் செயலியை விளம்பரப்படுத்திய சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், சமூக வலைதள நிறுவனங்களுக்கு அமலாக்கத்துறை தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பி விசாரித்து வருகிறது.
அந்தவகையில் கடந்த மாதம் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு நேரில் ஆஜரான நிலையில் தற்போது ஷிகர் தவான் இணைந்துள்ளார். அண்மையில் ஆன்லைனில் பணம் வைத்து விளையாடப்படும் அனைத்துச் செயலிகளுக்கும் இந்தியாவில் தடை விதிக்கப்பட்ட நிலையில் ஆன்லைன் சூதாட்டச் செயலி பணமோசடி விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
September 04, 2025 3:11 PM IST