Last Updated:
மனைவியை பிரிந்த பின்னர் மஹ்வாஷ் என்ற பிரபலத்துடன் யுஸ்வேந்திர சாஹல் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் மேட்ச்சை ரசித்துப் பார்த்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகின.
கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலிடம் ரூ. 60 கோடி ஜீவனாம்சம் அவரது முன்னாள் மனைவி தனஸ்ரீ கேட்டதாக தகவல்கள் பரவிய நிலையில், அதன் உண்மைத் தன்மை குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக யுஸ்வேந்திர சஹல் இருந்து வருகிறார். 20 ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என பாராட்டப்படும் இவர், பலமுறை இந்திய அணியின் வெற்றியில் பங்களித்துள்ளார். இவரும் பிரபல பாடகியும் மாடலுமான தனஸ்ரீயும் 2020 டிசம்பரில் திருமணம் முடித்தனர்.
இதன் பின்னர் இருவரும் ரொமாண்டிக்கான பல புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் பரவின. இந்நிலையில் சமீபத்தில் இருவரும் பரஸ்பரம் பிரிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சஹல் தரப்பிலும், தனஸ்ரீ தரப்பிலும் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக சாஹலிடமிருந்து ஜீவனாம்ச தொகையாக ரூ. 60 கோடி பணத்தை தனஸ்ரீ வர்மா கேட்டதாக இணையத்தில் தகவல்கள் பரவின. இதுகுறித்து தனஸ்ரீயை பலரும் இணையத்தில் விமர்சித்திருந்தார்கள். இருப்பினும் இந்த தகவல்களை தனஸ்ரீயின் குடும்பத்தினர் மறுத்திறுந்தனர்.
மனைவியை பிரிந்த பின்னர் மஹ்வாஷ் என்ற பிரபலத்துடன் யுஸ்வேந்திர சாஹல் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் மேட்ச்சை ரசித்துப் பார்த்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகின.
இந்நிலையில் தனஸ்ரீக்கு சாஹல் வழங்க வேண்டிய ஜீவனாம்ச தொகை குறித்த புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. இருவரும் விவாகரத்து செய்யும் விஷயத்தில் தனஸ்ரீக்கு ஜீவனாம்ச தொகையாக ரூ. 4.75 கோடியை வழங்குவதற்கு யுஸ்வேந்திர சாஹல் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த தொகையில் ரூ. 2.37 கோடி ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க – மனைவியை பிரிந்த நிலையில் இளம்பெண்ணுடன் மேட்ச்சை ரசித்த சாஹல்.. வைரலாகும் ஃபோட்டோஸ்
யுஸ்வேந்திர சாஹல் – தனஸ்ரீ வர்மா விவாகரத்து வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மார்ச் 21 ஆம் தேதி முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆரம்பிப்பதால், தன்னால் வழக்கு விசாரணையில் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரி சாஹல் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றம் நாளை முக்கிய உத்தரவை வெளியிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
March 19, 2025 4:59 PM IST


